spot_img
More
    முகப்புUncategorized’’வெளிநாட்டு மாணவர்கள், இந்தியாவில் படிக்க அழைப்பு..!’’ அமைச்சர் ஜெய்சங்கர்

    ’’வெளிநாட்டு மாணவர்கள், இந்தியாவில் படிக்க அழைப்பு..!’’ அமைச்சர் ஜெய்சங்கர்

    வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்கள் இந்தியாவில் கல்வி படிப்பை பெற இணையதளம் ஒன்றை மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    வெளிநாட்டு மாணவர்களுக்கான இணையதளம்:

    பல்வேறு வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்கவும், எளிய முறையில் விசாவுக்கு விண்ணப்பிக்கவும், மாணவர்கள் விரும்பும் படிப்பை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கவும் https://studyinindia.gov.in/ என்ற இணையதளத்தை நேற்று மத்திய அரசு தொடங்கியுள்ளது.

    இணையதளத்தின் நோக்கம்:

    “இந்த இணையதளத்தின் மூலம், இந்தியாவின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் சிந்தனைகள் பற்றி வெளிநாட்டு மாணவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்தியாவை உலகளாவிய கல்விமையமாக்கும் இணையதளம் இது”, என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    “இந்த இணையதளம் இந்தியாவை முக்கிய கல்வி மையமாக அங்கீகரிக்கும்”, என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

    கோ. தீபா புவனேஸ்வரி

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments