spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’ இந்தியப் பொறியியல் பணி ‘’ அரசு வேலைக்கு தயாராவோம்

    ’’ இந்தியப் பொறியியல் பணி ‘’ அரசு வேலைக்கு தயாராவோம்

    இந்தியப் பொறியியல் பணி (Indian Engineering Services) தேர்வு பற்றி தெரிந்து கொள்வோம். பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசின் பணிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

    இந்திய அரசின் உயர்பணிகளான இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service), இந்தியக் காவல் பணி (Indian Police Service), இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (Indian Civil Service Examination) தேர்வுகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.

    இதே போன்று, இந்திய அரசின் பொதுத்துறை, தொடருந்துத் துறை (ரயில்வே), கட்டுமானம், மின்சாரம் மற்றும் தொலைதொடர்புத் துறை போன்ற துறைகளில் இந்திய அரசின் தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் இணந்த ஆட்சிப்பணித் தேர்வாக இருந்து வரும் IES எனும் `இந்தியப் பொறியியல் பணி’ (Indian Engineering Services) தேர்வுகளைப் பற்றிப் பலருக்குத் தெரிவதில்லை.

    இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (Indian Civil Service Examination) தேர்வுகளை நடத்தும் இந்திய அரசின் மத்திய தேர்வாணையக் குழுவே (Union Public Service Commission) இந்தியப் பொறியியல் பணி தேர்வையும் நடத்துகிறது.

    அண்ணா பல்கலைக்கழகம்
    பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் (B.E/ B.Tech or Equivalent), இயற்பியல் பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.Sc Physics) பெற்றவர்களும் இந்திய அரசின் பொதுத்துறைப் பணிகளில் உயர் பணிகளைப் பெற்றிட உதவும் வகையில் அமைந்திருக்கும் இத்தேர்வை எழுதலாம்.

    இடஒதுக்கீடு:

    இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளும் உண்டு.

    பணி வகைகள்:

    இந்தியப் பொறியியல் பணிகள் அனைத்தும்

    1. Civil Engineering

    2.Mechanical Engineering

    3.Electrical Engineering

    4.Electronics & Telecommunication Engineering

    என்று நான்கு வகைப்பாடுகளில் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

    Category I — Civil Engineering

    Group‐A Services/Posts

    (i) Indian Railway Service of Engineers.

    (ii) Indian Railway Stores Service (Civil Engineering Posts).

    (iii) Central Engineering Service

    (iv) Central Engineering Service (Roads), Group‐A (Civil Engineering Posts).

    (v) Survey of India Group ‘A’ Service.

    (vi) AEE (Civil) in Border Road Engineering Service.

    (vii) Indian Defence Service of Engineers.

    (viii) AEE (QS&C) in MES Surveyor Cadre.

    (ix) Central Water Engineering (Group ‘A’) Service.

    (x) Indian Skill Development Service.

    Category II — Mechanical Engineering

    Group‐A/B Services/Posts

    (i) Indian Railway Service of Mechanical Engineers.

    (ii) Indian Railway Stores Service (Mechanical Engineering Posts).

    (iii) AEE in GSI Engineering Service Gr ‘A’.

    (iv) Indian Defence Service of Engineers.

    (v) Indian Naval Armament Service (Mechanical Engineering Posts).

    (vi) Asstt. Naval Store Officer Grade‐I (Mechanical Engineering Posts) in Indian Navy.

    (vii) AEE(Elec & Mech) in Border Roads Engineering Service(Mechanical Engineering Posts).

    (viii) Central Water Engineering (Group ‘A’) Service.

    (ix) Central Power Engineering Service Gr ‘A’ (Mechanical Engineering Posts).

    (x) Indian Skill Development Service.

    (xi) Central Power Engineering Service Gr ‘B’ (Mechanical Engineering Posts)

    Category III — Electrical Engineering

    Group‐A/B Services/Posts

    (i) Indian Railway Service of Electrical Engineers.

    (ii) Indian Railway Stores Service (Electrical Engineering Posts).

    (iii) Central Electrical & Mechanical Engineering Service (Electrical Engineering Posts).

    (iv) Indian Defence Service of Engineers.

    (v) Asstt. Naval Store Officer Grade‐I (Electrical Engineering Posts) in Indian Navy.

    (vi) Central Power Engineering Service Gr ‘A’ (Electrical Engineering Posts).

    (vii) Defence Aeronautical Quality Assurance Service/SSO‐II (Electrical).

    (viii) Indian Skill Development Service.

    (ix) Central Power Engineering Service Gr ‘B’ (Electrical Engineering Posts).

    Category IV —Electronics and Telecommunication Engineering

    Group‐A/B Services/Posts

    (i) Indian Railway Service of Signal Engineers.

    (ii) Indian Railway Stores Service (Telecommunication/Electronics Engineering Posts).

    (iii) Indian Radio Regulatory Service Gr ‘A’.

    (iv) Indian Telecommunication Service Gr ‘A’.

    (v) Indian Naval Armament Service (Electronics and Telecom Engineering Posts).

    (vi) Asstt. Naval Store Officer Grade‐I(Electronics and Telecom Engg. Posts) in Indian Navy.

    (vii) Central Power Engineering Service Gr ‘A’ (Electronics & Telecom Engineering Posts).

    (viii) Indian Skill Development Service.

    (ix) Junior Telecom Officer Gr ‘B’.

    (x) Central Power Engineering Service Gr ‘B’ (Electronics & Telecom Engineering Posts).

    கல்வித்தகுதி:

    இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கீழ்க்காணும் ஏதாவதொரு கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

    1. பொறியியல் படிப்பில் பல்கலைக்கழகப் பட்டம்

    2. இந்தியப் பொறியாளர்கள் நிறுவனத்தின் நிறுவனத் தேர்வுகளில் பிரிவு அ மற்றும் பிரிவு ஆ (passed Sections A and B of the Institution Examinations of the Institution of Engineers (India)) தேர்ச்சி.

    3. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் / கல்லூரி / நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் பட்டம்.

    4. இந்திய மின்னியல் மற்றும் தொலைதொடர்புப் பொறியாளர்கள் நிறுவனத்தின் பட்டதாரி உறுப்பினர் தேர்வு (Graduate Membership Examination of the Institution of Electronics and Telecommunication Engineers (India)) தேர்ச்சி.

    5. இந்திய வானூர்தி சங்கத்தின் இணை உறுப்பினர் தேர்வில் பகுதி 2 மற்றும் 3 / பிரிவு அ மற்றும் பிரிவு ஆ (passed Associate Membership Examination Parts II and III/Sections A and B of the Aeronautical Society of India) தேர்ச்சி.

    6. 1959 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய லண்டன், மின்னணுவியல் மற்றும் வானொலிப் பொறியாளர்கள் நிறுவனத்தின் பட்டதாரி உறுப்பினர் தேர்வு (passed Graduate Membership Examination of the Institution of Electronics and Radio Engineers, London held after November, 1959) தேர்ச்சி.

    7. இந்திய வானொலி ஒழுங்குமுறை சேவை குழு அ (Indian Radio Regulatory Service Group ‘A’) பணிகளுக்கான கம்பியற்ற தொடர்பு மின்னணுவியல், வானொலி இயற்பியல் அல்லது வானொலிப் பொறியியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc. degree or its equivalent with Wireless Communication Electronics, Radio Physics or Radio Engineering) அல்லது சிறப்புப் பாடமாக வானொலித் தொடர்பு அல்லது மின்னணுவியல் அல்லது தொலைதொடர்பியல் பாடங்களைக் கொண்டு இயற்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (Master’s Degree in Science with Physics and Radio Communication or Electronics or Telecommunication as a special subject.)

    வயது வரம்பு:

    விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

    21 வயதுக்குக் குறைவில்லாமலும்,
    30 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்.

    உடற்தகுதி:

    மருத்துவத் தேர்வு மற்றும் உடற்தகுதி
    இந்தியப் பொறியியல் பணித் தேர்வுகளுக்கு உரிய மருத்துவத் தேர்வில் தேர்வு பெறுவதுடன் இந்தியப் பொறியியல் பணிகளுக்கான உடற்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

    Preliminary Examination : முதல்நிலைத் தேர்வில்

    பொதுப்படிப்புகள் மற்றும் பொறியியல் திறன் (General Studies and Engineering Aptitude) பாடங்களைக் கொண்ட
    Paper I -தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்

    தொடர்புடைய பொறியியல் பாடப்பிரிவிலான (Paper II) தேர்வுக்கு 300 மதிப்பெண்

    என்று மொத்தம் 500 மதிப்பெண்ணுக்கு இரு கொள்குறி வகைத் தேர்வுகள் (Objective Type) நடத்தப்படும்.

    இத்தேர்வுக்கு தயார் செய்ய விரும்புபவர்கள் இந்திய அரசின் மத்திய தேர்வாணையக் குழுவின் www.upsconline.nic.in எனும் இணையதளத்திற்குச் சென்று தகவல் குறிப்பேடு , தேர்வுப் பாடத்திட்டம் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    B.E/B.Tech -ல் சேர்ந்த முதலாம் ஆண்டிலிருந்தே இத்தேர்விற்கு படிக்கத் தொடங்கினால் வெற்றி உறுதி. உங்கள் இலக்கை இன்றே தீர்மானியுங்கள்!
    நாளைய உலகம் உங்களுடையதாக இருக்கட்டும்.

    இந்த ஆண்டுக்கான இந்திய பொறியியல் பணி Engineering Services (Preliminary) Examination, 2027 தேர்வுக்கு 16.09.2026 அன்று விண்ணப்பபதிவு தொடங்கி, 06.10.2026 அன்று முடிவடைகிறது. 

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments