தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( 20.05.2026 ) வெளியானது. தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 பேர். அதில், மாணவியர் 4,35,247. மாணவர்கள் 4,35,396 பேர். பாஸ் ஆனவர்களில், மாணவியர் 96.47 சதவிகிதம். மாணவர்கள் 92.15 சதவிகிதம். 4.32 சதவிகிதம் மாணவியரே கூடுதலாக பாஸ் ஆகி இருக்கிறார்கள். தேர்வுக்கு எழுத வராதவர்கள் எண்ணிக்கை 11,174.
தமிழில் 34 பேரும் ஆங்கிலத்தில் 92 பேரும் கணிதத்தில் 3,194 பேரும் அறிவியல் பாடத்தில் 10,476 பேரும் சமூக அறிவியல் பாடத்தில் 3,336 பேரும் என்று நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை (97.57%), சிவங்கை (97.54%), தஞ்சாவூர் (97.41%), திருச்சி (97.31), கன்னியாகுமரி (97.30) என்று முதல் ஐந்து இடங்களை இந்த மாவட்டங்கள் பெற்றுள்ளன.

இந்நிலையில், சென்னை மாவட்டம் வேளச்சேரி அருகே புழுதிவாக்கத்தில் இயங்கி வரும் வியாசா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவ – மாணவியர் 100 சதவிகித தேர்ச்சி அடைந்துள்ளனர். பிருந்தா.வி (BRINDHAA V), ஸ்ரீநிதி.கே (SRINIDHI K) ஆகியோர் 500 மதிப்பெண்-க்கு 496 மதிப்பெண் எடுத்து வியாசா பள்ளியில் இரு மாணவிகள், பள்ளியில் முதல் மாணவிகளாக பாஸ் ஆகி இருக்கிறார்கள்.
சங்கமித்ரா.எஸ் (Sangamithra S) என்ற மாணவி 494 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடத்தையும் கெனிஷா டி (Kenisha T) என்ற மாணவி 493 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். இப்பள்ளியில் மொத்தம் 23 பேர், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். அதாவது, கணிதத்தில் 9 பேரும் அறிவியல் பாடத்தில் 9 பேரும் சமூக அறிவியல் பாடத்தில் 5 பேரும் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து இருக்கிறார்கள்.
வியாசா பள்ளியில் 41 பேர் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் 86 பேர் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இன்று, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். வியாசா பள்ளியின் முதுநிலை முதல்வர் டாக்டர் சுந்தர், முதல்வர் பிரகாசவல்லி சுந்தர் ஆகியோர் வழங்கி மகிழ்ந்தனர். பள்ளியின் ஆசிரியர்களை சந்தித்து மாணவ – மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.

