Home சுற்றுலா ”டூப்ளே, லபோர்த்தனே, அனந்த ரங்கப் பிள்ளை, பிரபஞ்சன்..!” ஆழ்வார்க்கடியான்

”டூப்ளே, லபோர்த்தனே, அனந்த ரங்கப் பிள்ளை, பிரபஞ்சன்..!” ஆழ்வார்க்கடியான்

0
”டூப்ளே, லபோர்த்தனே, அனந்த ரங்கப் பிள்ளை, பிரபஞ்சன்..!” ஆழ்வார்க்கடியான்

பாண்டி கடற்கரையில் ஓரமாக நிற்கும் அதன் வரலாற்று நாயகர் பிரெஞ்சு கவர்னர் டூப்ளே சிலையை பார்த்தேன்.

யாரோ ஒரு பழைய ஆங்கிலப் பட அப்பா கதா பாத்திரம் போல கேட்பாரற்று நிற்கிறார்.

பிரபஞ்சனின்

வானம் வசப்படும் | மானுடம் வெல்லும்

நாவல்கள் படிக்கும் வரை நானும் பாண்டிச்சேரி என்றால் மலிவு விலை மது விற்கும் என்று மட்டுமே அறிவேன்.

இந்தியாவை முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி செய்ய அடிப்படை காரணம் ராபர்ட் கிளைவ். சென்னை கிழக்கிந்திய கம்பெனி எழுத்தர் சிப்பாய் கேப்டன் கவர்னர் பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரல் என இந்திய வரலாற்றை மாற்றி அமைத்தவர்.

கிளைவ், சம காலத்தில் பிரெஞ்சு காலனியான பாண்டியின் கவர்னர் டூப்ளே

டூப்ளேவுக்கு பிரெஞ்சு அரசின் ராணுவ உதவி சரியாக கிடைக்கவில்லை.

ஆகையால்

ஆங்கிலேயரிடம் போட்டி போட முடியவில்லை.

அந்த டூப்ளேவுக்கு அனந்த ரங்கப் பிள்ளை என்ற துபாஷ் மிகுந்த பக்க பலமாக இருந்தார்.

ரங்கப் பிள்ளை கடல் வியாபாரம், ராணுவ நடவடிக்கை

உள்நாட்டு நிர்வாகம் அனைத்திலும் கொடி கட்டிப் பறந்தவர்.

பிள்ளை தினமும் இரவில் நாட்குறிப்பு எழுதிவைத்தார்.

அந்த நாட்குறிப்பு இந்திய வரலாற்றின் மிக முக்கிய வரலாற்று ஆவணம்

இந்த நாட்குறிப்புகளை எளிதாக புரியும் வகையில் பிரபஞ்சன் இரண்டு நாவல்கள் எழுதினார்.

வானம் வசப்படும்

மானுடம் வெல்லும் என்ற இரண்டு நாவல்களும் தினமணிக் கதிரில் தொடராக வந்தன.

பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருதை ‘வானம் வசப்படும்’ பெற்றுத் தந்தது.

அதன் பிறகு நான் பாண்டி செல்லும் போது எல்லாம் டூப்ளே ரங்கப் பிள்ளை ஆகியோரை மானசீகமாக பார்த்து வருவேன்.

இந்த முறை ஆட்டோ பிடிக்க தெரு முனைக்குச் சென்றால் ஆச்சர்யம்

லபோர்த்தனே வீதி என்று இருந்தது

ஆ… லபோர்த்தனே வீதியா என்றதும் ஆட்டோ ஓட்டுநர்களும் உடன் இருந்த ஒரு பிரெஞ்சிந்தியரும் திரும்பிப் பார்த்தனர்.

யார் சார் லபோர்த்தனே ? என்றார்.

லபோர்த்தனே கடற்படை Captain

பாண்டி

Beach -ல் சிலையாக நிற்கும் டூப்ளே கவர்னர்.

‘லபோர்த்தனே யுத்தம் செய்து பிடிக்கும் மாஹி காரைக்கால மெட்ராஸ் மொரிசியஸ் பகுதிகளை தங்கி இருந்து ஆட்சி செய்வது டூப்ளே போன்றவர் வேலை..!’ என்றேன்.

எப்படி தெரியும் என்றார் அந்த புது நண்பர்

பிரபஞ்சன் wrote two Novels … Vaanam Vasappadum,

maanndam Vellum based on the diary of Ranga Pillai

Ranga Pillai was the Dubash of Duplex

follow my English

google it என்றேன்

அந்த பிரெஞ்சு இந்திய நண்பர் தன் மூதாதையர் பற்றி மறந்து போன செய்தியைக் கிளறி விட்ட நிறைவுடன் பாண்டி பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஆட்டோ கிளம்பியது.

இளம் நண்பர்கள் முசே ஹரி முசே இளங்கதிருடன்

பாண்டியில் ஒரு பொன்மாலைப் பொழுது

ஆழ்வார்க்கடியான்

14.5.2026

(புதுச்சேரியின் காலனித்துவ கடந்த காலத்தில் ஆர்வம் கொண்ட எந்தவொரு சுற்றுலாப் பயணியும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்றுச் சின்னமாக இது திகழ்கிறது. அதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாகவும், பிரெஞ்சு மற்றும் காலனித்துவத் தோற்றம் கொண்ட பிற அடையாளங்களுக்கு அருகில் இது அமைந்திருப்பதாலும் பார்வையாளர்கள் இந்தச் சிலையைக் கட்டாயம் காண வேண்டும்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here