பாதுகாப்பு படையில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை ராணுவப்படைகளில் உள்ள காலியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்.
எல்லை பாதுகாப்பு போலீஸ் 15,654, தொழில் பாதுகாப்பு படை 7145, மத்திய ரிசர்வ் போலீஸ் 11,541, எஸ்.எஸ்.பி., 819, இந்தோ – திபெத் 3017, ஏ.ஆர்., 1248, எஸ்.எஸ்.எப்., 35, என்.சி.பி., 22 என மொத்தம் 39,481 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18 – 23 (1.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
தேர்வு மொழி: தமிழ் / ஆங்கிலம். இந்த தேர்வினை தமிழ் மொழியில் எழுதலாம். இத்தேர்விற்கான பாடங்களுக்கு அனைத்து வீடியோக்களும் www.youtube.com/@MadrasMurasu என்ற தளத்தில் உள்ளது. சப்ஸ்கிரைப் செய்து நோட்ஸ் எழுத்து படியுங்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசின் வேலையில் சேரலாம்.
Part – A General Intelligence and Reasoning –20 வினாக்கள்
Part – B General Knowledge and General Awareness 20 வினாக்கள்
Part – C Elementary Mathematics 20 வினாக்கள்
Part – D English அல்லது Hindi 20 வினாக்கள்
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.10.2024
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விபரங்களை படிக்க இங்கே கிளிக் Notice_of_CTGD_2024_09_05 செய்யலாம்.