Home கல்வி இளங்கலை, முதுகலைப் படிப்புகள் ஆன்லைன் வழி புதிய பாடப்பிரிவு சென்னை ஐஐடி

இளங்கலை, முதுகலைப் படிப்புகள் ஆன்லைன் வழி புதிய பாடப்பிரிவு சென்னை ஐஐடி

0
இளங்கலை, முதுகலைப் படிப்புகள் ஆன்லைன் வழி புதிய பாடப்பிரிவு சென்னை ஐஐடி

2026-27-ம் கல்வியாண்டில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகள் மற்றும் ஆன்லைன் வழி புதிய பாடப்பிரிவுகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. கணிதம், ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர் தொழில்நுட்பம், பொதுக் கொள்கை நிலையான பொறியியல், கடலோர மற்றும் கடல்சார் பொறியியல், விளையாட்டு பகுப்பாய்வு – செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய பாடப்பிரிவுகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன.

சென்னை ஐஐடி, 2026-27 கல்வியாண்டிற்காக இளங்கலை, முதுகலை மற்றும் ஆன்லைன் வாயிலாகப் படித்தல் ஆகியவற்றில் பல்வேறு புதிய கல்விப் பாடப்பிரிவுகளைத் தொடங்கியுள்ளது. இப்பாடத்திட்டங்கள் சென்னை ஐஐடி-ல் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் வளர்ந்துவரும், அதிக தாக்கம் கொண்ட துறைகளில் மேம்பட்ட இடைநிலைக் கல்வியைத் தொடர வாய்ப்புகளை வழங்குகின்றன.

HM image

கணிதம், ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர் தொழில்நுட்பம், பொதுக் கொள்கை நிலையான பொறியியல், கடலோர மற்றும் கடல்சார் பொறியியல், விளையாட்டு பகுப்பாய்வு – செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய பாடப்பிரிவுகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன.

அனைத்து புதிய கல்வித் திட்டங்கள் குறித்த தகவல்களை https://www.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

correspondent image

இதுகுறித்து பேசிய சென்னை ஐஐடி டீன் (பாடப்பிரிவுகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், சென்னை ஐஐடி தொடங்கியுள்ள புதிய பாடத்திட்டங்கள் தொழில்துறை, ஆராய்ச்சி, சமூகத்தில் மாறிவரும் தேவைகளைப் பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்தார். இவை மாணவர்களுக்கு வலுவான அடிப்படை அறிவுடன், பல்துறை சார்ந்த, தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் வளர்ந்து வரும் துறைகளில் உயர்தரக் கல்வியைப் பெற்று, எதிர்கால வாழ்க்கைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், நெகிழ்வான, இணைய அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளையும் தாங்கள் விரிவுபடுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here