spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்புமத்திய அரசில் 12,256 பணி இடங்கள் ..! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    மத்திய அரசில் 12,256 பணி இடங்கள் ..! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு மூலம் 12,256 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே 21ஆம் தேதியில் இருந்து ஜுன் 22 ஆம் தேதி வரை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

    பணியாளர் தேர்வாணையம், “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு, 2026”-க்கான அறிவிப்பை 21.05.2026 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்களில் உள்ள குரூப் “பி” மற்றும் குரூப் “சி” பணியிடங்களை நிரப்ப, திறந்தநிலை போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் சுமார் 12,256 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

    ஆணையத்தின் இணையதளமான ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் உள்ள ‘mySSC’ செயலி மூலம் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கடைசித் தேதி 22.06.2026 (இரவு 11:00 மணி) இணையவழிக் கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி 23.06.2026 (இரவு 11:00 மணி). விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், விண்ணப்பதாரர்கள் 1800 309 3063 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    தென் மண்டலத்தில், கணினி வழித் தேர்வு தோராயமாக ஆகஸ்ட் – செப்டம்பர் 2026 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் 13; புதுச்சேரியில் 01; தமிழ்நாட்டில் 09; தெலங்கானாவில் 04 என மொத்தம் 27 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்.

    பதவி விவரங்கள், வயது வரம்புகள், அத்தியாவசிய கல்வித் தகுதிகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், தேர்வுத் திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் தொடர்பான முழுமையான தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

    இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்த காலிப்பணியிடங்கள் என்ணிக்கை 12256 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆடிட்டர், எம்பிஏ உள்ளிட்ட தொழிற்கல்வி படித்தவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments