பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம் உருவாகிறது. KPY பாலாவின் ‘ரீமேட்ச்’ (REMATCH) திரைப்படம், பூஜையுடன் தொடங்கியது.
இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில்பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டு திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.

பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’(KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 2025 ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார். பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர், மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா.
‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதை மற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார் எழுதி இயக்குகிறார்.
இந்த படத்தை Zinema Media and Entertainment Ltd நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் மே 28 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாக நடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

