spot_img
More
    முகப்புஆரோக்கியம்புதுவை ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம் ..! நாலரை மணி நேரம் நடந்த...

    புதுவை ஜிப்மரில் 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம் ..! நாலரை மணி நேரம் நடந்த அ

    புதுச்சேரி ஜிப்மர் அறுவை சிகிச்சைத் துறையில் 73 வயதுடைய நோயாளிக்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய ரெட்ரோபெரிடோனியல் லிபோசார்கோமா கட்டி மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

    நோயாளி, கடந்த மே 16ஆம் தேதி அன்று வயிற்றுப் பெருத்தல் ஒரு ஆண்டாகவும், மூச்சுத்திணறல் ஆறு மாதங்களாகவும் இருந்த காரணத்தால் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொழுப்பு திசுக்களைக் கொண்ட மிகப்பெரிய கட்டி இடது சிறுநீரகக் குழாயை அழுத்தியதுடன், இடது சிறுநீரகத்தையும் முழுமையாக சூழ்ந்திருந்தது கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, சிறுநீரகக் குழாய் பாதிப்பு காரணமாக, சிறுநீரக மருத்துவத் துறை மே 20 ஆம் தேதி அன்று திறந்த அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இந்த அறுவை சிகிச்சையை அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் ராஜ்குமார் நாகராஜன் தலைமையில், டாக்டர் விமல்ராஜ், டாக்டர் ஷுபம், டாக்டர் சித்து ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்கொண்டனர். மயக்க மருத்துவக் குழுவை டாக்டர் சிவசண்முகம் (ஆலோசகர்) வழிநடத்தினார்.

    காலை 10.30 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை பிற்பகல் 3.00 மணிக்கு நிறைவடைந்தது. அறுவை சிகிச்சையின் போது, கட்டி இடது சிறுநீரகத்திற்குள் ஊடுருவியிருந்ததால், இடது சிறுநீரகத்தையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. முழுமையாக அகற்றப்பட்ட கட்டியின் அளவு சுமார் 65 × 45 செ.மீ. ஆகவும், எடை 15 கிலோவாகவும் இருந்தது.

    இந்த கட்டி இந்தியாவில் அகற்றப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய ரெட்ரோபெரிடோனியல் லிபோசார்கோமா கட்டியாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கட்டியாகவும் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு வாரணாசியில் உள்ள மகாமனா பண்டிட் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையத்தில்  30.5 கிலோ எடையுள்ள கட்டியும், 2022 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் 30.2 கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டிருந்தன.

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் நாளிலேயே வெற்றிகரமாக சுவாசக் குழாய் அகற்றப்பட்டு, தற்போது உடல்நிலை சீராக உள்ளது.

    இந்த அரிய வகை மிகப்பெரிய ரெட்ரோபெரிடோனியல் கட்டியை வெற்றிகரமாக அகற்றியது, மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறனில் ஜிப்மர் மருத்துவமனையின் மேம்பட்ட மருத்துவ நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments