கல்லூரி பேராசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5- ம் தேதி ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிபதற்கான கால அவகாசம் கடந்த மாதம் ஜூலை 30 – ந் தேதி முடிவடைந்த நிலையில், அதை ஆகஸ்ட் – 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் பேராசிரியர்கள் www.awards.gov.in மற்றும் www.nat.aicte-india.org என்ற இணையதளங்களில் ஆகஸ்ட் -7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
இதில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5 ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் விருது வழங்குவார் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
– கோ. தீபா புவனேஸ்வரி

