விஜய், டெல்லி பயணத்தில் நடந்தது என்ன? என்ற அதிரடி தகவல்களை மூத்த பத்திரிக்கையாளர் கே.கே.ஆதித்தன் வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
விஜயை சந்திக்க ராகுலுக்கும் நேரமில்லை.
முதல்வர் விஜய சந்திக்க ராகுல் காந்திக்கு நேரமில்லை என்று காங்கிரசைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி கூறுகிறார்.
இவர் தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் விஜயை சந்தித்து காங்கிரஸ் -தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு முயன்றவர்.

ராகுல் சந்திக்க விருப்பம் இல்லை என்றால் விஜய் டெல்லி செல்லும் போது அவர்கள் வீட்டில் விருந்து சாப்பிடுவார் என்று செய்தி பரப்பியது யார் ?
முன்கூட்டியே திட்டமிடாமலா 2 நாள் பயணத்தை விஜய் மேற்கொண்டார்.
ஏற்கனவே அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு அதையும் வெளியே சொல்லிவிட்டு பின்னர் சந்திப்பு ரத்து என்று செய்தி வெளியிட்டனர்.
ஆனால், நாங்கள் நேரமே ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறிவிட்டனர்.
இப்போது காங்கிரசும் அதே பதிலை கொடுத்துள்ளது.

ஆனால் உண்மையில் அமித்ஷா தரப்பு முதல்வரை சந்திக்க விரும்பவில்லை.
காரணம், தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் அமர, அதிமுகவில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் மூலம் வந்த ஆஃபரை முதலில் உதறியதுதான்.
அதுபோல காங்கிரஸிலும் ராகுல் வற்புறுத்தலால் திமுக கூட்டணியை விட்டு வந்ததை சோனியா இன்னும் ஜீரணிக்கவில்லை என்கிறார்கள்.
டெல்லியில் சந்திப்பு நடக்காததற்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்த முறை டெல்லி செல்லும் போது இந்த பிரச்சனைகளை சரி செய்ய வாய்ப்பு கிடைக்கலாம்.
பத்திரிகையாளர் கே.கே.ஆர்.ஆதித்தன்

