spot_img
More
    முகப்புசெய்திகள்''முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா..!''கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

    ”முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா..!”கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

    ’’ ஜூன் 3-ம் தேதி சென்னையில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கோலாகலமாக நடக்கும் இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்.

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா ஜூன் 03 சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாரிக்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

    இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இந்நிலையில், மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தனது முகநூல் பக்கத்தில், ‘’ விழா, அழைப்பிதழ் இன்று (26.05.2023) தலைமை அலுவலகம் தாயகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைவர் வைகோ -வை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். உடன் அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு. செந்திலதிபன், கழக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோரும் உடன் இருந்தனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments