தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த 19 பட்டப்படிப்புகளுக்கான (பாராமெடிக்கல் கோர்ஸ்) மாணவர் சேர்க்கைக்கு ஜுன் 19- ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நர்சிங், பிசியோதெரபி, பார்மசி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 19-ல் தொடங்குகிறது. அதாவது பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி, ஆப்தொமெட்ரி, ஆக்குபேஷனல் தெரபி, பிசியோதெரபி (பி.பீ.டி), நியூரோ டெக்னாலஜி, பெர்பியூஷன் டெக்னாலஜி, ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டயாலிசஸ் டெக்னாலஜி, ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லேங்குவேஜ் பெதாலஜி, ரெஸ்பிரேடரி தெரபி, கார்டியோ வாஸ்குலர் டெக்னாலஜி, அனஸ்திஸ்யா டெக்னாலஜி போன்ற 19 வகையான துணை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.
அதற்கான விண்ணப்பங்களை ஜூன் 19- ம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 28 -ம் தேதி மாலை 5 மணி வரை http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, செயலாளா், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இப்படிப்புக்கு உள்நாடு, வெளிநாடு என்று உடனடி வேலைவாய்ப்புகள் உள்ளன. சுயமாகவும் தொழில் செய்யலாம்.

