spot_img
More
    முகப்புசெய்திகள்''சுதந்திர தின விழாவிற்காக ரயில் நிலையங்களில் மூன்று நாட்கள் பாதுகாப்பு..!'' ரயில்வே காவல்துறை அறிவிப்பு

    ”சுதந்திர தின விழாவிற்காக ரயில் நிலையங்களில் மூன்று நாட்கள் பாதுகாப்பு..!” ரயில்வே காவல்துறை அறிவிப்பு

    தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்று தமிழக ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குறும்படம் ஒன்றை அவர் வெளியிட்டார். இதில் நடிகர் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு குறும்படத்தில் ரயில் விபத்துக்களை எப்படி தவிர்க்க வேண்டும். எச்சரிக்கையுடன் ரயில் பாதையை கடப்பது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களின் கவனக்குறைவும் ரயில் விபத்துக்கு காரணமாக இருக்கின்றன. அவசரத்தினால் உயிர் போகிறது இதன் மூலம் குடும்பத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. மேலும் செல்போன் பேசிக்கொண்டே கடக்காமல் சென்றாலே ஆறு மரணங்களை ஒரு நாளைக்கு குறைக்க முடியும் என்று டிஜிபி வனிதா குறும்படம் வெளியிட்டு கூறியுள்ளார்.

    மேலும் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை திருச்சிராப்பள்ளி மதுரை திருநெல்வேலி சேலம் கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வருகின்ற 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பும் ஏற்படுத்தப்படும் என்றும் கூடுதல் டிஜிபி வனிதா கூறினார்.

    தே . சுகன்யா

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments