spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன்

    ’’காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் மத்திய அமைச்சர் பேசுகிறார்..! அமைச்சர் துரைமுருகன்

    காவி­ரி­யின் வர­லாறு தெரி­யா­மல் கருத்து தெரி­வித்­தி­ருக்­கும் ஒன்­றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் -க்கு தமி­ழக நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரைமு­ரு­கன் பதி­ல­ளித்­துள்­ளார். அதில், காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்கே காவி­ரி­யில் தண்­ணீர் திறந்து விடும் அதிகா­ரம் உண்டு என்று ஆணித்தர­மாக குறிப்­பிட்­டுள்­ளார்.

    இது குறித்து அமைச்­சர் துரை­மு­ரு­கன் பதில் வரு­மாறு:

    கடந்த இரண்டு மாத­கா­ல­மாக கர்­நா­ட­கம் தமி­ழ­கத்­திற்கு உச்ச நீதி­மன்­றம் அறி­வித்த அள­வுப்­படி தண்­ணீரை வழங்­க­வில்லை.

    இது குறித்து முதல்­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்­கும், ஒன்­றிய நீர்­வ­ளத் துறை அமைச்­ச­ருக்­கும் கடி­தம் எழுதி இருக்­கி­றார்­கள். ஒன்­றிய நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­களை நான் இரண்­டு­முறை நேரில் சந்­தித்து நிலை­மை­களை விளக்கி இருக்­கி­றேன்.

    காவிரி மேலாண்மை வாரி­யம் முழு­மை­யாக செயல்­ப­ட­வில்லை!

    காவி­ரி­யி­லி­ருந்து தண்­ணீரை திறந்து விடு என்று கூறு­கிற அதி­கா­ரம் காவிரி மேலாண்மை வாரி­யத்­திற்­கு­தான் உண்டு. அந்த வாரி­யம் கூட்­டிய கூட்­டங்­க­ளில் தமி­ழக நீர்­வ­ளத்­துறை செய­லா­ளர் சந்­தீப் சக்­சேனா அவர்­கள் கலந்து கொண்டு தமி­ழ­கத்­திற்கு தண்­ணீர் திறந்­து­விட கர்­நா­ட­கத்தை அறி­வு­றுத்த வேண்­டும்என்று பல­முறை கோரிக்கை வைத்­துள்­ளார்.

    ஆனா­லும், காவிரி மேலாண்மை வாரி­யம் இது­வ­ரை­யில் முழு­மை­யாக செயல்­ப­ட­வில்லை. நீர் சரா­ச­ரி­யாக கிடைக்­கும் வரு­டங்­க­ளில் கர்­நா­ட­கம் எந்­தெந்த மாதங்­க­ளில் எவ்­வ­ளவு திறந்து விட­வேண்­டும் என்று உச்­ச ­நீ­தி­மன்­றம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. ஆனால், நீர் பற்­றாக்­குறை ஏற்­ப­டும் காலங்­க­ளில் நீரை பகிர்ந்து கொள்­வதை Pro Rata Basis என்று குறிப்­பி­டு­வார்­கள். அந்த பங்­கீட்டை காவிரி மேலாண்மை வாரி­யம் இது­வரை செய்­ய­வில்லை. இந்த வாரி­யம் ஒன்றிய அ­ர­சின் கீழ்­இ­யங்­கு­கி­றது. என­வே­தான் தமி­ழ­கத்­திற்கு தண்­ணீரை திறந்­து­விட கர்­நா­ட­கத்தை அறி­வு­றுத்­து­மாறு வாரி­யத்­தி­டம் கேட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றோம். அந்த பணியை வாரி­யம் செய்­ய­வேண்­டும் என்­று­தான் தமி­ழக முதல்­வர் அவர்­க­ளும் பிர­த­ ம­ருக்கு கடி­தம் எழுதி இருக்­கி­றார்­கள்.

    அந்த கடி­தத்­திற்கு பிர­த­மர் அலு­வ­ல­கமோ அல்­லது ஒன்­றிய நீர்­வளத்­துறை அமைச்­சரோ பதில் அளிக்­காத நிலை­யில், ஒன்­றிய இணை அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் என்­ப­வர், கர்­நா­ட­கத்­தில் காங்­கி­ரஸ் ஆட்சி, தமி­ழ­கத்­தில் தி.மு.க. ஆட்சி, இரண்­டும் ஓர் அணி­யில் இருக்­கி­றார்­கள் ஏன் பிரச்­சி­னை­யை­நே­ரில்­பே­சித் தீர்த்­துக் கொள்­ளக் கூடாது” என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

    ஒன்­றிய இணை அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர் அர்­க­ளுக்கு காவிரி பிரச்­சி­னை­யின் முழு விவ­ரம் தெரி­ய­வில்லை என்று நினைக்­கி­றேன். 1967 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்­பி­ரச்­சினை குறித்து பேசி­பே­சி­ எந்­த­மு­டி­விற்­கும் வர­ மு­டி­யாத நிலை­யில் தான் ஒன்­றிய அரசு காவிரி நடு­வர் மன்­றத்தை அமைத்­தது. காவிரி நடு­வர் மன்­றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்­ச­நீதி மன்­றத்­திற்கு போய், உச்­ச­நீ­தி­மன்­றம் சில­தி­ருத்­தங்­க­ளோடு தீர்ப்பு வழங்­கி­விட்­ட­பி­றகு இரு மாநி­லங்­க­ளி­டையே பேச்­சு­வார்த்தை என்­ப­தற்கே இட­மில்லை. பேச்சு வார்த்­தை­யின் மூலம் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடிந்­தி­ருந்­தால் நடு­வர் மன்­றம் அமைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யமே ஏற்­பட்­டி­ருக்­காது. இவை­யெல்­லாம் நீண்­ட­கா­ல­மாக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கிற வர­லாறு.

    உரி­மையை நிலை­நாட்­டு­வ­தில் அவ­ர­வர் உறுதி!

    ‘தாயும் பிள்­ளை­யும் என்­றா­லும் வாயும் வயி­றும் வேறு­வே­று’­­என்று கிரா­மங்­க­ளில் கூறு­வ­து­ போல, தோழ­மை­யாக இருந்­தா­லும் தோழ­மை­யாக இல்­லா­விட்­டா­லும் அவ­ர­வர் உரி­மையை நிலை நாட்­டு­வ­தில் அவ­ர­வர்­கள் உறு­தி­யாக இருப்­பார்­கள். அந்த நிலைப்­பா­டு­தான் தமி­ழ­கத்­தின் நிலைப்­பாடு.

    இந்த விவ­ர­மெல்­லாம் தெரி­யா­மல் ஒன்­றிய இணை அமைச்­சர் ஒரு­வர் தள­ப­திக்கு அறி­வுரை சொல்­வது போல் ஓர் அறிக்கை விட்­டி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கி­றது.

    அடிப்­படை வர­லாறு தெரி­யா­மல் பேசும் ஒன்­றிய அரசு!

    இதில் இன்­னொரு வேடிக்கை. வேடிக்­கை­யா­னது மட்­டு­மல்ல வேத­னை­யா­னது என்­ன­வென்­றால், தமி­ழ­கத்­தின் நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ரா­க­வும், முன்­னாள் முதல்­வ­ரா­க­வும் இருந்­த­வ­ரு­மான ஓ.பன்­னீர்­செல்­வம் ஒரு அறிக்­கை­யில், தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் கர்­நா­டக மாநில முதல்­வ­ரோ­டும், நீர்­ ­வளத்­து றை அமைச்­ச­ரோ­டும் பேசி தண்­ணீரை பெற­வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருப்­ப­து­தான். இனி பேச்­சு­வார்த்­தைக்கு இட­மில்லை என்ற நிலை­யில்­தான் நடு­வர் மன்­றம் போனோம், தீர்ப்பு பெற்­றி­ருக்­கி­றோம். இந்த தீர்ப்­பில் ஏதா­வது பிரச்­சினை என்­றால் உச்­ச­நீதி மன்­றத்­தைத்தான் நாடே­வேண்­டு­மே­த­விர, மீண்­டும் கர்­நா­டக மாநி­லத்­தோடு பேச்­சு ­வார்த்தை நடத்­த­லாம் என்று கூறு­வது காவிரி பிரச்­சி­னை­யின் அடிப்­படை வர­லாறே தெரி­யா­த­ த­னம் தான். பாவம், அர­சி­யல் பிரச்­ சி­னை­யில் ஓ.பன்­னீர்­செல்­வம் மிக­வும் குழம்­பிப் போய் இருக்­கி­றார் என்­ப­தைத்தான் அவர் அறிக்கை காட்­டு­கி­றது.

    இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments