Home செய்திகள் மாவீரர் கலைஞர்; மறைந்தும் நிறைந்தும் இருக்கிறார்..!

மாவீரர் கலைஞர்; மறைந்தும் நிறைந்தும் இருக்கிறார்..!

0
மாவீரர் கலைஞர்; மறைந்தும் நிறைந்தும் இருக்கிறார்..!

எம் அகம்­நிறை அய்யா, கலை­ஞர் அவர்­களே ! இன்று ஆகஸ்ட் 7, உங்­களு­டைய நினைவு நாள் !

நினை­வு­நாள் என்­பது மறைந்த நாள் !

எல்லா நாளி­லும், உங்­க­ளைப் பற்­றிய நினைவே எம் நெஞ்­ச­ மெல்­லாம் நிறைந்­தி­ருக்­கும்­போது, நினை­வு­ நாள் என்­பது காலக் குறி­யீ­டே­யன்றி வேறில்லை. நீங்­கள் மறைந்து, எவ்­வி­டத்­தும் நிறைந்­தி­ ருக்­கி­றீர்­கள்; நேர­டி­யா­கப் பார்த்­துப் பார்த்து, உடன் பிறப்­பு­களை ஒவ்­வொரு நொடி­யும் நெறிப்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்த நீங்­கள், மறைந்­தி­ருந்து பார்த்து, உங்­க­ளின் மகத்­து­வத்தை எமது மன­தி­னில் எந்­நா­ளும் மின்­ன­லாய்ப் பாய்ச்­சிக் கொண்­டுள்­ளீர்­கள்!

எனவே நீங்­கள் மர­ண­ம­டைந்து விட்­டீர்­கள் என்று எம் நெஞ்­சம் எப்­படி ஏற்­றுக்­கொள்­ளும்? கண்­கா­ணும் காட்சி எதி­லும், செவி கேட்­கும் செம்­பொ­ருள் அனைத்­தி­லும், நீங்­களே நீக்­க­மற நிறைந்­தி­ருக்­கும்­போது, இறந்­து­ விட்­டீர்­கள் என்று எம் இத­யந்­தான் எண்­ணிப் பார்த்­தி­டுமோ? அந்­தக் கொடும் பிழையை எப்­போ­தும் இழைத்­த­தில்லை எமது இத­யம்!

நீங்­கள் மர­ண­ம­டை­ய­வு­மில்லை, இறந்து விட­வு­மில்லை.“வீரன் சாவதே இல்லை”என்று விவே­க­மொழி பகர்ந்­த­வர் நீங்­கள்­தானே!

நீங்­கள் இயற்­கை­யி­லேயே வீர­ராய் இருந்­த­த­னால்­தானே;

திரு­வா­ரூ­ரில் உங்­க­ளு­டைய திரு­மண நாளன்று, பெரி­யார் வாழ்க! தமிழ் வாழ்க! இந்தி வீழ்க! என்ற முழக்­கங்­க­ளோடு , தமிழ் வீரத்­து­டன் சொந்த மண விழா­வி­னையே புறக்­க­ணித்­து­விட்டு, இந்தி எதிர்ப்பு ஊர்­வ­லத்­து­டன் கலந்­து­விட்­டீர்­கள்!

நீங்­கள் இயல்­பா­கவே வீர­ராய் இருந்­த­த­னால்­தானே;

கல்­லக்­குடி போராட்­டத்­திலே தலைமை ஏற்று,“எங்­க­ளுக்கு முன்னே நின்­றி­ருந்த ரயி­லின் ‘கிரீச்’ என்ற சப்­தமோ -– – அல்­லது ரயில் எம்­மீது ஏறி எமது எலும்­பு­கள் ‘மளுக்’ ‘மளுக்’ என்று முறி­யும் சப்­தமோ -– தில்லி ஆட்சி பீடத்­தின் காதில் எட்­டுமோ எட்­டாதோ? மக்­கள் மன்­றத்­திற்கு எட்­டும், நிச்­ச­ய­மாக எட்­டும்.அது இந்த ஆதி­பத்­தி­யக்காரரை ஆயி­ரம் தேள்­போ­லக் கொட்­டும்”என்ற மன தைரி­யத்­து­டன், கட­லின் கொந்­த­ளிப்பு உள்­ளத்­திலே, காலைக் கதி­ர­வ­னின் நிறம் கண்­க­ளிலே, சேவ­லின் மிடுக்கு நடை­ யி­னிலே எனும்­படி, நடை­போட்­டுச் சென்று, தண்­ட­வா­ளத்­திலே தலை­வைத்­துப்படுத்­தீர்­கள் !

நீங்­கள் விவே­கம் மிக்க வீர­ரா­கவே வளர்ந்­த­த­னால்­தானே;

இந்­திய அர­சி­ய­லில் முன்­ன­ணி­யி­னர் பல­ரும் இந்­தி­ரா­வின் அவ­ச­ர­ நி­லைப் பிர­க­ட­னத்­திற்கு அஞ்சி நடுங்­கிப் பதுங்­கிய போது,“உண்­மை­யின் உரு­வம் மறைக்­கப்­பட்டு, பொய்­யின் நிழ­லில் நின்­று­கொண்டு, எதிர்க் கட்­சி­களை அடக்­கு­ வ­தற்­குத் திட்­டம் தயாரித்து, அந்­தத் திட்­டம் ஏன் தேவைப்­ப­டு­ கி­றது என்­ப­தற்­கான போலிக் கார­ணங்­களைத் தேடி அலைந்து, வீண் அப­வா­தங்­களை வாரி இறைத்து – எடுத்­த­தற்­கெல்­லாம் சதி, வெளி­நாட்­டுத் தொடர்பு, பிற்­போக்­கு­வா­தி­கள் என்ற சொற்­க­ணை­க­ளைப் பொழிந்து காலா காலத்­திற்­கும் இந்­திய நாட்டு மக்­க­ளுக்கு மாசு ஏற்­ப­டுத்­தும் வகை­யில், சர்­வா­தி­கா­ரத்­திற்­கான தொடக்க விழா நடை­பெற்­றுள்­ளது”என்று; நீங்­கள் ஒரு­வர்தானே, ஆவே­சம் கொண்டு அழிவு தரும் அவ­சர நிலை­யைக் கண்­டித்­துத் தீர்மா­னம் நிறை­வேற்­றி­னீர்­கள் !

நீங்­கள் வீர­ரா­கவே பிறந்து, வீர­ரா­கவே விளங்­கி­ய­த­னால்­தானே;

அன்­றொரு நாள்,உங்­கள் பிறந்த நாளுக்கு முதல்­நாள், வீட்­டி­லி­ருந்து காரில் புறப்­பட்டு, ஆயி­ரம் விளக்­குப் பகு­தி­யைத் தாண்­டி­ய­தும் காரி­லி­ருந்து இறங்கி, எமர் ஜன்­சியை எதிர்க்­கும் அறப்­போர் விளக்­கத் துண்­டுப் பிர­சு­ரங்­களை உங்­கள் கையிலே எடுத்­துக் கொண்டு அதனை அண்ணா சாலை­யில் செல்­வோர் அனை­வ­ரி­ட­மும் நீங்­களே விநி­யோ­கிக்க -– – மக்­கள் ஆவ­லு­ட­னும், ஆச்­ச­ரி­யத்­து­ட­னும் உங்­க­ளைப் பின்­தொ­டர, போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பித்த நிலை­யில்,நடந்து கொண்டே அண்ணா சிலை அடி பீடம் வரை சென்று, கம்­பீ­ர­மா­கப் பறக்­கும் கழ­கக் கொடி­யைக் கையிலே ஏந்தி, திடீ­ரெ­னச் சேர்ந்து கொண்ட பல்­லாயி­ரக்கணக்­கான தோழர்­கள் மத்­தி­யிலே,சர்­வா­தி­கா­ரம் வீழ்க! ஜன­நா­ய­கம் வாழ்க! என்று வீரா­வே­சத்­து­டன் முழக்­க­மிட்­டீர்­கள்!

உங்­கள் பிறப்­பி­லி­ருந்தே தொடர்ந்த மன உறு­தி­யி­னால்தானே;

கட்­சிக்­குள்ளே பேசித் தீர்வு காண வேண்­டிய பிரச்­சி­னையை, திட்­டு­மிட்டு வெளியே, பொதுத் திட­லில் மக்­க­ளைக் கூட்டி வைத்­துக் கொண்டு பேசிய மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர்.அவர்­களை, கட்­டுப்­பாடு பேண கட்­சியை விட்டே விலக்கி வைக்­க­வும்; சட்­டப் பேர­வைத் தலை­வ­ராக இருந்த கே.ஏ.மதி­ய­ழ­கன் அவர்­களை, சூழ்ச்­சி­யான எண்­ணத்­து­ ட­னும், ஏற்ற பத­விக்கு முரண்­பா­டா­க­வும் அவைக்­குள்­ளேயே நடந்து கொண்­ட­தால்,பத­வி­யி­லி­ருந்து இறக்­க­வும்; கட்­சி­யின் பெரும்­பான்­மை­யோ­ரின் எண்­ணத்தை அறிந்து, தீர்­மா­னித்­தீர்­கள் !

அய்யா, இவ்­வாறு உங்­கள் வாழ்க்கை நெடு­கி­லும் வீர வர­லாற்­றின் ஏரா­ள­மான பக்­கங்­கள். “வீரம் விலை போகாது, விவே­கம் துணைக்கு வரா­விட்­டால்” என்று, முறை வகுத்­த­தும் நீங்­களே! விவே­க­மும், வீர­மும் விடி­ய­லைப் போலத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்­கும்; பகலோ இரவோ, விடி­யலை மாற்­றிப் போடு­வ­தில்லை.உங்­க­ளு­டைய வாழ்க்கை, தமி­ழுக்­கும், தமிழ்­இ­னத்­திற்­கும் கிட்­டிய விடி­யல்.தமிழ் மொழி­யின் நெஞ்­சத்­தி­லும்,தமிழ் இனத்­தின் நினை­வி­லும் எழுச்­சி­யின் ஏற்­ற­மிகு சிற்­பமாய் நிலைத்து விட்­ட­வர் நீங்­கள் !

அலெக்­ஸாண்­ட­ரைப் போன்ற மாவீ­ரர் நீங்­கள் ! நாடு­கள் தோறும் படை­யெ­டுத்து, வெற்­றிக் கொடி நாட்­டிய கிரேக்க மாவீ­ர­னைப் போல; தமிழ் இலக்­கி­யத்­தின் வகை­கள்தோறும், புலமை துணை கொண்டு, தொகை தொகை­யாய்ப் புத்­தி­லக்­கி­யம் படைத்து, வெற்­றிக் கொடி நாட்­டிய மாவீ­ரர் நீங்­கள்!

உங்­க­ளுக்கு ஏது இறப்பு ? என்­றும் இருப்பு மட்­டுமே! மறைந்­தும், எங்­க­ணும் நிறைந்­தி­ருக்­கும் மாம­னி­தர் நீங்­கள்!

அய்யா, நீங்­கள் ‘அசல்’ ; இன்று எம் தள­பதி, அச­லின் ‘நகல்’. நகலை, நாளும் கண்டு கண்டு, அச­லின் அரு­மையை ஆர்ப்­ப­ரிக்­கி­றது தமிழ் கூறு நல்­லு­ல­கம் !

-நன்றி முரசொலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here