spot_img
More
    முகப்புUncategorized''கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை..!'' வந்தது...

    ”கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை..!” வந்தது அதிரடி சட்டம்

    ''கழிவுநீர் தொட் டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது, இதை மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா 17.6.2023 வெளியிட்ட அறிவிப்பு:

    மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 இன்படி கழிவுநீர்த் தொட்டியில் எந்த வொரு சூழ்நிலையிலும் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டியை இயந்திரங் களை கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் பிரிவு 7 இன்படி எந்தவொரு நபரோ, உள்ளாட்சி அமைப்போ அல்லது எந்தவொரு நிறுவனமோ நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ எந்தவொரு பணியாளரையும் அபாயகரமான கழிவுநீர் கட்டமைப்புகளை கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    இதனை மீறுவோர் மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக மீறினால் 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக் கப்படும். இரண்டாவது முறை மீறி னால் 5 ஆண்டு சிறை தண்டணை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர், ஒப்பந்ததாரர், பணி அமர்த்தியவர்கள் மீது மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறு வாழ்வு சட்டம் 2013, இந்திய தண்டனை சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின்படியும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 2002 ஜூன் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை 83 ன்படி ரூ.15 லட்சம் இழப்பீடாக இறந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும்.

    2022 டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 183 மூலம் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சென்னைப் பெருநகர பகுதி கழிவு நீர் மேலாண்மை ஒழுங்குமுறை விதிகள், 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படியும் அனைத்து கழிவுநீர் லாரிகளும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments