spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்"நாடே கொண்டாடும் தோனி..!" நியூசிலாந்தில் கான்வே

    “நாடே கொண்டாடும் தோனி..!” நியூசிலாந்தில் கான்வே

    "தோனியை ஒரு நாடே கொண்டாடுகிறது. இந்தியாவில் தோனிக்கு உள்ள ஆதரவு நம்ப முடியாதது" என நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே பேட்டி அளித்தார்.

    ஐபிஎல் 2023 போட்டி முடிந்து நியூசிலாந்து திரும்பியுள்ளார் டெவான் கான்வே. இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழந்த கான்வே, 16 ஆட்டங்களில் 672 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தார் அவர்.

    குஜராத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி 5-வது முறையாக்க் கோப்பையைப் பெற்றது. ஆட்டநாயகன் விருதை கான்வே வென்றார். இதனையடுத்து சொந்த ஊருக்குத் திரும்பிய கான்வே சென்ஸ் மார்னிங்கிடம் தோனி மற்றும் சிஎஸ்கே அணி குறித்துப் பேசினார்.

    ரசிகர்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள ஆதரவு குறித்துப் பேசியுள்ள அவர், “இந்தியாவில் தோனிக்கு உள்ள ஆதரவு நம்ப முடியாதது. அது வேறு மாதிரியான உலகம். அவருக்காக ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரசிகர்கள் வெவ்வேறு மைதானங்களுக்குப் பயணிக்கின்றனர். இதனால் வெளியே ஆட்டம் நடந்தாலும் எங்களுக்கு சேப்பாக்கத்தில் நடப்பது போலவே இருந்தது. வீரர்களுக்கு மத்தியிலும் அவர்மீது பெரும் மரியாதை இருக்கிறது. மக்களுக்கு மத்தியில் தோனிக்கு உள்ள வரவேற்பைப் பார்க்கும்போது அவர் ஹோட்டலுக்கு வெளியே செல்வது அவ்வளவு எளிதானதல்ல எனத் தோன்றுகிறது” என்றார்.

    சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் குறித்து கான்வே பேசுகையில், “அணிக்குள் அவர் நல்ல பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். தோனி மற்றும் அணியின் உரிமையாளர்களுடன் அவருக்கு நல்ல உறவு உள்ளது. அவருடைய ஒத்துழைப்பு என்பது தனி நபர் மற்றும் குழுவாக எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் கூறினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments