spot_img
More
    முகப்புUncategorized"டி.என்.பி.எல் கிரிக்கெட் நெல்லை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி ..!"

    “டி.என்.பி.எல் கிரிக்கெட் நெல்லை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி ..!”

    கோவை நகரில் நடைபெற்ற கடைசி டிஎன்பிஎல் 2023 ஆட்டத்தில் ரசிகர்கள் விரும்பியவாறு பரபரப்பான ஆட்டம் அமைந்தது. நெல்லை அணி வெற்றி பெற்று, 2-வது இடத்தில் உள்ளது.

    20 வயது அஜிதேஷின் அற்புதமான சதத்தால் கோவை அணியை வீழ்த்தியுள்ளது நெல்லை ராயல் கிங்ஸ்.

    டாஸ் வென்ற நெல்லை அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர் சச்சினை டக் அவுட் செய்தாலும் அதன்பிறகு ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் – சுரேஷ் குமார், 9-வது ஓவர் வரை நன்கு விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

    6.4 ஓவர்களின் அணியின் ஸ்கோர் 50-ஐ எட்டியது. 33 ரன்கள் எடுத்து 9-வது ஓவரின் இறுதியில் ஆட்டமிழந்தார் சுரேஷ் குமார்.

    ஐபிஎல் போட்டியில் கவனம் பெற்ற சாய் சுதர்சன், அடுத்ததாக டிஎன்பிஎல்-லிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய ஆட்டத்தை மையப்படுத்தியே கோவையின் இன்னிங்ஸ் அமைந்தது.

    35 பந்துகளில் அரை சதம் எட்டினார் சாய் சுதர்சன். இன்னமும் டி20-யில் சதமடிக்காத சாய் சுதர்சன், இன்று அந்த உயரத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 19-வது ஓவரில் 90 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடித்தார். ஷாருக் கான் 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.

    கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியின் பொய்யாமொழி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    கடினமான இலக்கை நம்பிக்கையுடன் விரட்டினார்கள் நெல்லை பேட்டர்கள்.

    அருண் கார்த்திக் டக் அவுட் ஆனாலும் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் கிடைத்தன. கெளதம் தாமரை கண்ணன் வீசிய 3-வது ஓவரில் 3 பவுண்டரிகளை அஜிதேஷ் அடிக்க, 1 சிக்ஸர் அடித்தார் ஸ்ரீ நிரஞ்சன்.

    10 ஓவர்களில் 76 ரன்கள் என்கிற நிலையில் அடுத்த ஓவரில் 25 ரன்களுக்கு நிரஞ்சன் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் அஜிதேஷ். அரை சதமெடுத்த பிறகு அதிரடியாக விளையாடி கோவை அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

    கடைசிக்கட்டத்தில் சோனு யாதவ் 20 ரன்கள் எடுத்தது முக்கியமான பங்களிப்பு. 58 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார் அஜிதேஷ். 20 வயதில் நம்பிக்கைக்குரிய தமிழக பேட்டராக அவர் உள்ளார்.

    எனினும் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டன. அஜிதேஷ் ஒரு சிக்ஸர் அடித்தாலும் பிறகு ஸ்டிரைக் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அபாரமான சிக்ஸரை அடித்தார் பொய்யாமொழி.

    கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து மறக்க முடியாத ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியது நெல்லை அணி. இந்த வெற்றியால் நெல்லை அணி 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. கோவை அணி 4-ம் இடத்தில் உள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments