spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’6244 அரசு வேலை - கல்வித் தகுதி - பாடத்திட்டம்..!’’ முக்கிய தகவல்கள் முழுமையான அப்டேட்

    ’’6244 அரசு வேலை – கல்வித் தகுதி – பாடத்திட்டம்..!’’ முக்கிய தகவல்கள் முழுமையான அப்டேட்

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6244 இடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் அறிக்கை வெளியாகி உள்ளது. அதாவது, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி, பாடத்திட்டம், மதிப்பெண் முறைகள் ஆகிய முக்கிய தகவல்களை விரிவாக பார்ப்போம்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 28.02.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    1. கிராம நிர்வாக அலுவலர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 108

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    2. இளநிலை உதவியாளர் (அமைச்சு பணி)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 2486

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    3. இளநிலை உதவியாளர் (பிற பணிகள்)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 118

    (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – 10, வக்பு வாரியம் – 27, குடிநீர் வடிகால் வாரியம் – 49, சிறு தொழில் கழகம் – 15, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – 7, மூலிகை மருந்து கழகம் – 10)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

    4. தட்டச்சர் (அமைச்சு பணி)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 1653

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    5. தட்டச்சர் (பிற பணிகள்)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 52

    (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – 3, சிறு தொழில் கழகம் – 3, வாணிப கழகம் – 39, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – 7)

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    6. சுருக்கெழுத்து தட்டச்சர் (அமைச்சு பணி)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 441

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    7. சுருக்கெழுத்து தட்டச்சர் (பிற பணிகள்)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 4

    (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – 2, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – 2)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    8. நேர்முக உதவியாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 1

    (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    9. நேர்முக எழுத்தர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 2

    (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    10. தனிச் செயலாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 4

    (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    11. இளநிலை செயல் பணியாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 34

    (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    12. இளநிலை செயல் பணியாளர் (தட்டச்சு)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 7

    (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

    12. வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 1

    (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலைபேசி இயக்குவதில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    13. பால் அளவையாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 15

    (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

    கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

    14. ஆய்வக உதவியாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 25

    (தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி)

    கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    15. வரித்தண்டலர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 66

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    16. முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 49

    கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்புடன் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

    17. வனக் காப்பாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 171

    கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18. ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 192

    கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    19. வனக் காவலர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 526

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    20. வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்)

    காலியிடங்களின் எண்ணிக்கை: 288

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    21. கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்

    காலியிடங்களின் எண்ணிக்கை: 1

    கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு; 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சில பணிகளுக்கு வயது வரம்பு இல்லை.

    தேர்வு முறை: தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.

    தேர்வு நடைபெறும் நாள்: 09.06.2024

    விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதனை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். வனப் பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதனை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முழுமையாக விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு பாடத்திட்டம்: 

    தமிழ் தகுதித் தேர்வு பகுதியில் 100 கேள்விகள் கேட்க்கப்படும். 150 மதிப்பெண். இது பார்ட் ஒன்று என்ற பிரிவின் கீழ் இந்த பகுதி வருகிறது. அடுத்ததாக பார்ட் 2 என்ற பகுதியின் கீழ் பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும். 10 ஆம் வகுப்பு தரத்தில் கணக்கு பாடத்தில் இருந்து 25 கேள்விகள் கேட்க்கப்படும். மொத்தம் 100 கேள்விகள் 150 மதிப்பெண்.

    மாற்றுத்திறனாளி தேர்வர்கள், ஆங்கில வழியில் படித்து இருந்தால் அவர்களுக்கு தமிழ் தகுதி தேர்வுக்கு பதில் பொது ஆங்கிலம் பாடம் எடுத்துக் கொள்ளலாம். அனைத்து தேர்வர்களுமே தமிழ் தகுதி தேர்வு அல்லது பொது ஆங்கிலம் தகுதி தேர்வில், குறைந்தபட்சம் 60 மதிப்பெண் (40%) என்பது குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்ணாக வைக்கப்பட்டுள்ளது. 60 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்தால்தான் பார்ட் 2 பேப்பர் திருத்தப்படும். பார்ட் 1, பார் 2 இரண்டு தாள்களிலும் எடுக்கும் மொத்த மதிப்பெண், தேர்வர்களின் ரேங்க் பட்டியலிலின் போது சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    தமிழ் தகுதி தேர்வு மாதிரி வினாத்தாள் பார்க்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யலாம். தமிழ் தகுதித் தேர்வு வினாத்தாள்_Group_IV

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முழுமையான தேர்வு அறிவிக்கையை பார்க்க கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யலாம். குருப் 4 தேர்வு அறிவிக்கை 2024

     

     

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments