spot_img
More
    முகப்புகல்விகல்லூரிகள்’’கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் நேரம் இது..!

    ’’கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் நேரம் இது..!

    பட்டப்படிப்புக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி வெளியாகி இருக்கிறது.

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாகும் நிலையில் விண்ணப்ப விநியோக குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கல்லூரிகள் விபரம் அறிய https://tngasa.com/ என்ற இணைய தளத்தை தொடரலாம். தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை அவர்களது கல்லூரி இணைய தளத்தையோ அல்லது அக்கல்லூரி அலுவலகத்தையோ நேரில் தொடர்பு கொண்டு சேர்க்கை விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments