spot_img
More
    முகப்புசெய்திகள்’’5-ம் வகுப்பு வரை ஜூன் 14 ம் தேதி; 6 முதல்12 வகுப்புகள் ஜூன் 12-ம்...

    ’’5-ம் வகுப்பு வரை ஜூன் 14 ம் தேதி; 6 முதல்12 வகுப்புகள் ஜூன் 12-ம் தேதி .! தமிழக அரசு

    ’வெயில் வாட்டி வதைப்பதால் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதற்கு பதிலாக , 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 12-ல் திறக்கப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகள் வரை ஜுன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கத்திரி வெயில் முடிந்த பிறகும் தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி திறப்பு ஜூன் 1-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வெயில் தாக்கம் குறையாததால் அந்த தேதியில் பள்ளியை திறக்க கூடாது என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வெளியானது.

    இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு பள்ளி திறப்பு தேதியை மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை மட்டும் ஜுன் 12-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments