spot_img
More
    முகப்புஅதிகம் வாசிக்கப்பட்டவை’’அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுனருடன் நடத்துநர் நியமனம்..!’’ அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு

    ’’அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுனருடன் நடத்துநர் நியமனம்..!’’ அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு

    ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவைகளை மேம்படுத்திட ஏதுவாக  காலிப்பணியிடங்களை நிரப்புதல், கருணை அடிப்படையிலான வாரிசுதாரர்களை பணி நியமனம் செய்தல், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான பணப்பலன்களை வழங்குதல் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்’’ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கை:
    போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், 10.10.2023 அன்று, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ், அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (PTCS)   மேலாண் இயக்குநர், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் மற்றும் போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
    இவ்வாலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர், பொதுமக்களுக்கு பேருந்து சேவையினை நிறைவாக அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் குறைந்த பயண கட்டணத்தில் பேருந்து சேவையினை வழங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி தொடர்ந்த போதிலும், போக்குவரத்து சேவையினை சிறப்பாக செய்தும், பயண கட்டணத்தை உயர்த்தாமலும் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது.
    முதலமைச்சர் உத்திரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து சேவைகளை மேம்படுத்திட ஏதுவாக, 1,619 காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல் கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுனருடன் நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவுபடுத்த அறிவுறுத்தினார்கள்.
    கருணை அடிப்படையிலான பணி நியமனங்களின் நிலை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தற்போது, அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும், இறந்த பணியாளர்களின் வாரிசுகள் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்பிரிவில், நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்கள்.
    மேலும், வாகனங்களைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கும், அவற்றின் செயல்திறனை அதிகப்படுத்துவதற்கு ஊக்கப்படுத்த, தற்போது வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு ஊக்கத் தொகை / சிறப்பு ஊக்கத்தொகையை உயர்த்துவது தொடர்பாக ஆராயுமாறு அறிவுறுத்தினார்கள்.
    இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர்-2022 முதல் ஆகஸ்ட்-2023 வரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களுக்கான நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
    மேலும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துதல் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தல் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து, காப்பீட்டு தொகை குறித்து விவரம் கோரப்பட்டு, இக்காப்பீடு தொடர்பாக ஓய்வூதியர்களிடம் விருப்புரிமை படிவம் பெற்றும், தொழிற்சங்கத்தினரிடம் கலந்தாலோசித்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என அறிவுறுத்தினார்கள்’’ என்று போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments