மேற்கு வங்கத்தின் இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள கலிம்பாங் என்ற மலை நகரத்தில் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார் மாயா டிசோஸா (கரீனா கபூர்). 14 ஆண்டுகளுக்கு முன்பு பார் டான்சராக இருந்த மாயா தன் கொடுமைக்கார போலீஸ் கணவனிடமிருந்து தப்பித்து வந்து, தற்போது ஒரு சிறிய கஃபே நடத்தி வருபவர். அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளியில் கணக்கு வாத்தியாராக இருப்பவர் நரேன் (ஜெய்தீப் அஹ்லாவத்). ஊரே ‘டீச்சர்’ என்று மதிக்கும் அவருக்கு மாயாவின் மீது ஈர்ப்பு. மாயாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவர், மாயாவின் அன்றாட நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். அமைதியாக செல்லும் மாயாவின் வாழ்க்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரிந்து வந்த கணவர் அஜித் (சவுரம் சச்தேவா) தலையிடுகிறார்.
கணவனால் தன் மகளுக்கு ஆபத்து வருவதை அறிந்த மாயா, கோபத்தில் எதிர்பாராமல் கணவனை கொன்றுவிடுகிறார். செய்வதறியாமல் தவித்து நிற்கும் மாயாவுக்கு அவரது மகளுக்கும் உதவ தானாய் முன்வருகிறார் டீச்சர் நரேன். கொலையை மறைக்க சில பல சம்பவங்களை இருவரும் செய்கின்றனர். இந்தக் கொலையை விசாரிக்க மும்பையிலிருந்து கலிம்பாங் நகருக்கு வரும் போலீஸ் அதிகாரி கரண் (விஜய் வர்மா) கொலை பற்றி தீவிரமாக விசாரிக்கிறார். கொலையாளியை கரண் கண்டுபிடித்தாரா என்பதே ‘ஜானே ஜான்’ படத்தின் திரைக்கதை.
ஜப்பானிய நாவலான The Devotion of Suspect X இந்தியாவில்தான் எத்தனை படங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது? மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம், இந்தக் கதையை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டது.
பிறகு தமிழில் இது பாபநாசமாகவும் இந்தியில் த்ரிஷ்யமாகவும் வெளியானது. கன்னடம், தெலுங்கு, ஏன் சிங்களத்திலும்கூட இந்தப் படம் ரீ மேக் ஆனது. பிறகு சீன, கொரிய மொழிகளிலும் ரீ மேக் ஆவதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், Suspect X க்கும் த்ரிஷ்யத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. ஆகவே, ஒரு துல்லியமான Suspect X க்கான இடம் காலியாகவே இருந்தது. அந்த இடத்தை நிரப்பியிருக்கிறது Jaane Jaan. ஆகவே இது Suspect X ன் அதிகாரபூர்வமான ரீ – மேக்.
மேற்கு வங்கத்தின் காலிம்போங் மாவட்டத்தில் நடக்கிறது கதை. அங்கே கணவனைப் பிரிந்து மகளை தனியாக வளர்த்து வருகிறார் மாயா டிசௌசா (கரீனா கபூர்). அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் நரேன் (ஜெய்தீப் அஹ்லாவத்). அவருக்கு மாயா மீது ஒரு பிரியம் உண்டு. மாயாவின் பிரிந்துபோன கணவனான அஜீத் (சௌரப் சச்தேவா), திடீரென ஒரு நாள் வந்துவிடுகிறான்.
அவனுடைய துன்புறுத்தல் தாங்காமல் அவனைக் கொன்று விடுகிறார்கள் தாயும் மகளும். அவர்களைக் காப்பாற்ற முன்வருகிறான் நரேன். அஜீத்தைத் தேடிவரும் காவல்துறை அதிகாரியான கரண் (விஜய் வர்மா), மாயாவைச் சந்தேகிக்கிறான். முடிவில் என்ன ஆகிறதென்பதுதான் கதை. த்ரிஷ்யத்தைப் போல நாயகனுக்குச் சாதகமான முடிவு இதில் இருக்காது.
இது மாதிரி ஒரு கதைக்குத் தேவையான இடத்தைப் பின்னணியாக வைத்து, நல்ல நடிகர்களைத் தேர்வு செய்ததிலேயே இந்தப் படத்திற்கு பாதி வெற்றி கிடைத்துவிட்டது. குறிப்பாக கரீனா கபூர், ஜெய்தீப் ஆகியோரின் நடிப்பு அபாரம். சில காட்சிகளிலேயே வரும் சௌரவ் சச்தேவா வழக்கம்போலவே கலக்கியிருக்கிறார்.
இந்தப் படத்திற்குத் தேவையான இருண்மையை ஒளிப்பதிவு அளிக்கிறது. தேவையான பதற்றத்தை பின்னணி இசை அளிக்கிறது.
கரீனா கபூரின் ஓடிடி அறிமுகம் என்றே இப்படம் விளம்பரத்தப்பட்டது. அதற்கான நியாயத்தையும் அவர் செய்திருக்கிறார். மகளை காப்பாற்ற ஆக்ரோஷம் கொண்டு கணவனை கொலை செய்யும்போதும், செய்த கொலையை மறைக்க அல்லாடும் போதும் தேர்ந்த நடிகையாக மிளிர்கிறார். ஆனால் உண்மையில் இது ஜெய்தீப் அஹ்லாவத்தின் படம். தனிமையில் காலத்தை கழிக்கும் நடுத்தர வயது கணக்கு வாத்தியாராக வாழ்ந்துள்ளார் ஜெய்தீப். ’பாதாள் லோக்’, ‘ஆன் ஆக்ஷன் ஹீரோ’ ஆகியவற்றில் தனி முத்திரை பதித்திருந்தாலும் இதனை தனது வாழ்நாள் நடிப்பாக அவர் சொல்லிக் கொள்ளலாம். முகத்தில் எப்போதும் ஒரு கலவரத்துடன் வலம் வரும் வெளிப்படுத்தும் சின்னச் சின்ன உணர்வுகள் கூட அபாரம்.
ஜப்பானிய எழுத்தாளரான ஹெய்கோ ஹிகாஷினோ கடந்த 2005-ஆம் ஆண்டு எழுதி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற நாவல் ‘தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’. இதை தழுவி சுஜோய் கோஷ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ளது ‘ஜானே ஜான்’ (Jaane Jaan) திரைப்படம்.
நெட்ஃப்ளிக்ஸில் தமிழிலும் ஸ்ட்ரீமாகிறது இந்தப் படம். கண்டிப்பாக பாருங்கள்.

