தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பெண் செவிலியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு கிடையாது. 10, 12, செவிலியர் சான்றிதழ் ஆகியவற்றின் மதிப்பெண் அடிப்படையில் இந்த பணி நியமனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான நியமனங்களை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) வெளியிட்டுள்ளது.
துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.300 ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
பதவி (Post): Auxiliary Nurse Midwife/ Village Health Nurse
காலியிடங்கள் (Vacancy): Auxiliary Nurse Midwife/ Village Health Nurse – 2250
கல்வித் தகுதி (Educational Qualification):
(i) Must have passed Higher Secondary (+2).
(ii) Must have undergone two years Multi – Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course awarded by the Director of
Public Health and Preventive Medicine.;
(iii) A certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council; and
(iv) Must possess physical fitness for camp life. Provided that those who have undergone 18 months Multi – Purpose Health Workers (Female) Training Course / Auxiliary Nurse Midwifery Training Course awarded by the Director of Public Health and Preventive Medicine and have passed S.S.L.C (10th Standard) prior to 15.11.2012 are also eligible.
வயது வரம்பு: SC / ST / SCA / BC / BCM / MBC & DNC பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18. அதிக பட்சம் வயது 60-க்குள் இருக்க வேண்டும். அதாவது ஓய்வு பெறும் வயதை தாண்டி இருக்க கூடாது. முன்னேறிய வகுப்பினரான OC பிரிவினரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 52 , ஆதரவற்ற விதவை அதிகபட்ச வயது 59 என்றும் இந்த முன்னேறிய பிரிவில் மற்றவர்களுக்கு உச்சபட்ச வயது 42 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை (Selection Process): மொத்தம் உள்ள 100 மதிப்பெண்ணில் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு 20%, 12 ஆம் வகுப்புக்கு 30%, நர்ஸ் படிப்புக்கு 50% என்று வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பில் எடுத்த மதிப்பெண் கொண்டு கணக்கிடப்படும். இந்த நர்ஸ் வேலைக்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். வேறு எந்த தேர்வுகளும் கிடையாது. பெண் நர்ஸ் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இது தற்காலிக வேலை என்றுதான் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனாலும் இது தமிழ்நாடு அரசு விதிகளுக்கு உட்பட்டு பின்னர், நிரந்தரம் செய்யப்படும்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.10.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.10.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் www.mrb.tn.gov.in என்ற் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காணலாம்.

