spot_img
More
    முகப்புசெய்திகள்’’வாழ்த்துகள் சென்னை சூப்பர் கிங்ஸ்..!’’ டாக்டர் தமிழிசை

    ’’வாழ்த்துகள் சென்னை சூப்பர் கிங்ஸ்..!’’ டாக்டர் தமிழிசை

    ’’ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த வீரர் ரவீந்திர ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.

    தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘’2023 ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வீரர் மகேந்திர சிங் தோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடினர்.
    குறிப்பாக நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6-ரன்கள் மற்றும் 4-ரன்கள் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த வீரர் ரவீந்திர ஜடேஜா அவர்களுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments