spot_img
More
    முகப்புசெய்திகள்"நூற்றாண்டு நாயகர் கலைஞரின் புகழை பரப்புவோம் - ஊர்தோறும் கழகக்கொடி உயரப்பறக்கட்டும்" அமைச்சர் உதயநிதி

    “நூற்றாண்டு நாயகர் கலைஞரின் புகழை பரப்புவோம் – ஊர்தோறும் கழகக்கொடி உயரப்பறக்கட்டும்” அமைச்சர் உதயநிதி

    "நூற்றாண்டு நாயகர் கலைஞரின் புகழை பரப்புவோம் - ஊர்தோறும் கழகக்கொடி உயரப்பறக்கட்டும்" என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

    திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “தமிழினத்தின் மேன்மைக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடி அவரது சாதனைச் சரித்திரத்தை இல்லம்தோறும் எடுத்துச் செல்வோம்!

    கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை அவர் புகழ் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி, புத்துணர்வு பெற்று, கழகத்தின் 75-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம்” என்று கூறியுள்ளார்.

    திமுக இளைஞர் அணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை திருவாரூர் கலைஞர் கோட்டம் – ஊர்கள் தோறும் தி.மு.க – என்றென்றும் ; எங்கெங்கும் கலைஞர் என ஆண்டு முழுவதும் கொண்டாட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக உயர்நிலை செயல்திட்டக்குழு முடிவு செய்திருப்பது, ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உத்வேகமளிக்கின்ற ஒன்றாகும். நூற்றாண்டு நாயகர் கலைஞரின் புகழை பரப்புவோம் – ஊர்தோறும் கழகக்கொடி உயரப்பறக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments