spot_img
More
    முகப்புசெய்திகள்"ம.தி.மு.க. உள்கட்சி தேர்தல்..!" தலைமைக் கழகம் அறிவிப்பு

    “ம.தி.மு.க. உள்கட்சி தேர்தல்..!” தலைமைக் கழகம் அறிவிப்பு

    ம.தி.மு.க. உள் கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ம் தேதி சென்னையில் வேட்புமனுதாக்கல் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் தேர்தல் நடைபெறுகிறது.

    மதிமுக தலைமைக் கழக அறிவிப்பு:

    ஜூன் 1 : சென்னையில் வேட்புமனுதாக்கல்!

    கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் 14.06.2023 சென்னை – அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ – புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறும்.

    இதனை முன்னிட்டு, 2023 ஜூன் 1 ஆம் நாள் வேட்புமனு பெறும் நிகழ்ச்சி சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற இருக்கிறது.

    தலைமைக் கழக நிர்வாகிகள்

    தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐவர் (ஒருவர் மகளிர்) ஆகிய பொறுப்புகளுக்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற இருபத்தைந்து (25) பேர் முன்மொழிந்தும், இருபத்தைந்து (25) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.

    ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு

    ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக ஏழு (7) பேரும், தணிக்கைக்குழு உறுப்பினர்களாக ஆறு பேரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஒவ்வொரு வேட்பு மனுவும் பொதுக்குழு தகுதி பெற்ற பத்து (10) பேர் முன்மொழிந்தும், பத்து (10) பேர் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.

    பொதுக்குழு தகுதி

    தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள். தகுதி பெற்ற ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள்.

    வேட்பு மனு தாக்கல் நாள் – இடம்

    01.06.2023 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 12 பகல் மணி வரை.

    தலைமைக் கழக அலுவலகம், தாயகம், எழும்பூர், சென்னை – 600 008

    27.05.2023 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கழக அமைப்புச் செயலாளர் இரா.பிரியகுமார் (98402 17200) மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் (94430 49151) ஆகியோரிடம் உரிய கட்டணத்தைச் செலுத்தி வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    தேர்தல் ஆணையாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் இரா.பிரியகுமார்,

    கொள்கைவிளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்,

    தேர்தல் பணிச் செயலாளர் இரா.அந்திரிதாஸ் ஆகியோர் செயல்படுவார்கள்.

    வேட்பு மனு திரும்பப் பெறுதல்

    03.06.2023 சனிக்கிழமை மாலை 3 மணி வரை.

    கட்டணம்

    தலைமைக் கழக நிர்வாகிகள் வேட்புமனு விண்ணப்பப் படிவம் – ரூ. 250/-

    வேட்பாளர் கட்டணம் – ரூ. 25,000/-

    ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், தணிக்கைக் குழு உறுப்பினர் வேட்புமனு விண்ணப்பப் படிவம் – ரூ. 100/-

    வேட்பாளர் கட்டணம் – ரூ. 12,000/-

    வேட்பாளர்கள் கட்டணம் வங்கி வரைவோலை (General Secretary, MDMK,) அல்லது வங்கி (Canara Bank: SB A/C No. 0416101011012; IFSC Code- CNRB0000416) மூலமாகவோ செலுத்த வேண்டும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments