விமானப் படையில் அதிகாரி பணியில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 317 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணம் ஆகாத ஆண் – பெண் இருபாலாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Flying Branch பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது நான்கு ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் 60 சதவிகிதத்திற்கு அதிகமான மதிப்பெண்ணுடன் பாஸ் ஆகி இருக்க வேண்டும். வயது 20 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். என்.சி.சி மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது.
Ground Duty (Technical) Branch பணிக்கு விண்ணப்பிப்போர்,12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்கள் எடுத்து படித்து குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து பாஸ் ஆகி இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பொறியியல் படிப்பில் 60 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

Ground Duty (Non-Technical) Branches பணியில் Weapon Systems (WS) Branch, Administration& Logistics, Accounts Branch, Meteorology Branch ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் பட்டதாரியாகவோ அல்லது பொறியியல் பட்டதாரியாகவோ இருக்க வேண்டும். இதில் Education பணிக்கு விண்ணப்பிப்போர் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 20 முதல் 26 இருக்க வேண்டும்.
விமானப்படை அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. General Awareness, Verbal Ability in English, Numerical Ability and Reasoning and Military Aptitude Test ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 100 கேள்விகள் கேட்க்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண். இத்தேர்வு குறித்து முழு விபரத்தை பார்க்கவும் வேலைக்கு விண்ணப்பிக்கவும் மாதிரி தேர்வு எழுதிப்பார்க்கவும் https://careerindianairforce.cdac.in அல்லது https://afcat.cdac.in என்ற இணையத்தை பார்க்க வேண்டும்.

சாதிக்கத் துடிக்கும் இளையோர், டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேசப் பாதுகாப்பு பணியில் சேர்ந்து தாய் நாட்டுக்கு சேவை செய்வோம்.

