spot_img
More
    முகப்புசெய்திகள்''வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மதுரையில் பொது விசாரணை..!'' ஜூலை 1 ஆம் தேதிக்குள் மனு கொடுக்கலாம்

    ”வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மதுரையில் பொது விசாரணை..!” ஜூலை 1 ஆம் தேதிக்குள் மனு கொடுக்கலாம்

    வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மதுரையில் பொது விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவி ஏ.எஸ்.குமாரி மதுரையில் தெரிவித்தார்.

    சமூக நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமாரி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்து பெண்கள் கூட்டமைப்புடன் ஜூன் 14-ம் தேதி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி கூறியதாவது:

    ’’தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளாகி வரு கிறார்கள். சைபர் கிரைம் குற்றங் களில் பெண்கள் அதிக அளவில் சிக்கிக்கொண்டு உள்ளனர். பெண் கள் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆணையத்தின் வாயிலாக எடுக் கப்பட்டுள்ளது,

    மதுரையில் பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பொது விசாரணை நடத்தப்பட உள்ளது. மதுரையில் நடைபெறும் பொது விசாரணையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பெண்கள் பங்கேற்கலாம். மதுரையை தொடர்ந்து தமி ழகத்தில் பல்வேறு மாநிலங்களில் பொது விசாரணை நடத்தப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் நேரடியாக புகார் அளிக்கிறார்கள்.

    ஜூலை 1 ஆம் தேதிக்குள் பொது விசாரணைக்கான புகார் மனுக்களை அனுப்பலாம், தலைவர், தமிழ்நாடு மகளிர் ஆணையம், கலச மஹால் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 5 எனும் முகவரிக்கு புகார் மனுக்களை அனுப்பலாம், விபரங்களுக்கு 044 – 28551155, 044 – 2859 2750 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில், மகளிர் சட்ட உதவி மன்ற தலைவர் நிர்மலா ராணி, ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர்கள் எஸ். கே. பொன்னுத்தாய், ஆர்.சசிகலா, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் க. பிரேமலதா, மாநகர் மாவட்ட செயலாளர் வை. ஜென்னியம்மாள், தலைவர் ஆர். லதா, மாமன்ற உறுப்பினர் விஜயா உள்பட பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments