spot_img
More
    முகப்புசெய்திகள்’’ரேஷன் கடைகளில் தக்காளி ரூ.60..!’’ தமிழக அரசு அதிரடி

    ’’ரேஷன் கடைகளில் தக்காளி ரூ.60..!’’ தமிழக அரசு அதிரடி

    தக்காளியின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து தக்காளியின் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ. 100 முதல் ரூ.120 வரை உயர்ந்து காணப்பட்டது.

    இதனை அடுத்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, பல்வேறு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறையினர் செய்து வருகின்றனர்.தற்போது ஒரு கிலோ தக்காளி ஆனது ரூ.60 க்கு விற்கப்படுகிறது. இவை 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60க்கு விற்கப்படுகிறது.

    தொடர்ந்து விலையேற்றம் காரணமாக 32 ரேஷன் கடைகளில் செயல்பட்டு வந்த விற்பனையானது தற்போது 500 ரேஷன் கடைகளுக்கும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் நியாய விலை கடைகளில் நீண்ட வரிசையில் நின்று தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

    தே.சுகன்யா

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments