spot_img
More
    முகப்புபசுமை'’முருங்கை விளைச்சல் ஆஹா ஓஹோ..!’’ பூச்சி மருந்து தெளிக்க மெஷின் கண்டுப்பிடித்த விவசாயி

    ‘’முருங்கை விளைச்சல் ஆஹா ஓஹோ..!’’ பூச்சி மருந்து தெளிக்க மெஷின் கண்டுப்பிடித்த விவசாயி

    முருங்கை மரத்தில் பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளிக்க விவசாயிகள் தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்தி ரத்தை கண்டுபிடித்துள்ளனர்

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளி மந்தையம், பொருளுர், கப்பல்பட்டி, வாகரை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் தக்காளி, முருங்கை, வெங்காயம், கடலை,  மக்காச்சோளம், மிளகாய், கத்திரி உள்  ளிட்ட விவசாயப் பயிர்கள் பயிரிடப்பட்டன.

    மரமுருங்கையில் கம்பளி புழு, இலை  புழு தாக்குதல் இருக்கும். இளம் குருத்து  மற்றும் இலைகளில் இவை குவியலாக இருக்கும். இதனால் விளைச்சல் பாதிக் கப்படும். இதனை கட்டுப்படுத்த மருந்தை குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் கலந்து  தெளித்தால் கூட்டு புழுக்களை அழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மருந்து தெளிப்பானை முதுகில் தூக்கிக்கொண்டு நடந்தே பல மணி நேரம் சென்று மரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். 

    உயரமான மரங்களில் மருந்து  செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.  இந்நிலையில் கள்ளிமந்தையம் அருகே உள்ள கப்பல்பட்டியைச் சேர்ந்த  செல்வபிரகாஷ், சவடமுத்து ஆகிய விவ சாயிகள் தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரத்ரை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த இயந்திரத்தை சிறிய டிராக்டரில் பொருத்தி பின்பகுதியில் பெரிய சின் டெக்ஸ் தொட்டியை இணைத்து அதில் போதுமான மருந்து மற்றும் தண்ணீர் கலந்து வைத்துள்ளார். டிராக்டரில் 3 அடி இடைவெளியில் உள்ள மரங்களை சுற்றி வரும்போது தானியங்கி இயந்திரத்தின் இரு பக்கங்களில் உள்ள குழாய்களின் வழியாக மருந்துகள் சுற்றி சுற்றி சொட்டுநீர் பாசனம் போல பீய்ச்சி அடித்து தெளிக்கிறது.

    இதன் மூலம் முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments