பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு:
“2016 ஆம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.
அதிமுக ஆட்சியில் 1.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை.
பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு கடந்த அதிமுக ஆட்சி ஒரு உதாரணம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியின்போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளன’’

