மலையாளத்தில் முன்னணி கதாநாயகங்களில் ஒருவர் பிரித்திவிராஜ், இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமின் என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த டிரைலரில் இடம்பெற்றிருந்த பிரித்விராஜ், அமலாபால் உதட்டு முத்தம் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அமலாபால் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
“இந்த படத்தின் கதையை சொல்லும் போதே பிரித்விராஜ், உதட்டு முத்தக்காட்சி பற்றி விளக்கமாக கூறினார். படத்திற்கும், கதைக்கும் அந்த முத்தக்காட்சி மிகவும் அவசியம் என்பதால்தான் நான் நடித்தேன். மேலும், கதைக்கு தேவை என்றால் ஆடை இல்லாமல் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக உள்ளதாகவும், உதட்டு முத்தம் கொடுப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை” என தெரிவித்துள்ளார்.

