spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகுதல்..! அதிபர் ரணில்- பிரதமர் மோடி உடன்பாடு

    மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகுதல்..! அதிபர் ரணில்- பிரதமர் மோடி உடன்பாடு

    ''எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனஞ்செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டுமென்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம்'' என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    டெல்லியில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு:

    தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை செயலாற்றுமென நான் உறுதியாக நம்புகின்றேன். இந்திய – இலங்கை நட்புறவின் 75 ஆண்டுகளையும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையையும் இவ்வருடத்தில் நாம் கொண்டாடுகின்றோம். இலங்கையில் வசித்துவரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்காக 75 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அத்துடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களிலும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு வழங்கும். இருநாடுகளினதும் வர்த்தக மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனஞ்செலுத்தப்பட்டது.

    இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டுமென்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன்.

    அத்துடன் சுற்றுலாத்துறை, எரிசக்தி, வர்த்தகம், கல்வி, நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் திறன்விருத்தி ஆகியவற்றில் தொடர்புகளையும் ஒத்துழைப்பினையும் மேலும் வலுவாக்குவதற்ககாகவும் நாம் செயலாற்றியுள்ளோம்.

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்.
    ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடத்தை நிறைவுசெய்வதுடன் இலங்கையின் முன்னேற்றத்துக்காக சிறந்த உத்வேகத்துடன் செயலாற்றுகின்றமைக்காக அவருக்கு எனது பாராட்டுகள்.

    எமது அயலுறவுக்கு முதலிடம் மற்றும் சாகர் முயற்சிகளில் இலங்கை முக்கியத்துவம் பெறுகின்றது, அதற்கேற்ப நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து கலந்துரையாடியுள்ளோம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments