spot_img
More
    முகப்புசெய்திகள்’’மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள்..!’’ ஜூன் 26 கடைசி நாள்

    ’’மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள்..!’’ ஜூன் 26 கடைசி நாள்

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அதற்கு ஜுன் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் ஒவ்வொரு வருடமும் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து விருதாளர்களுக்கு முதலமைச்சரால் விருதுகள் வழங்கி ஊக்குவித்து கவுரவிக்கப்படுகிறது. 

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான  தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, இவ்வருடமும் கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2023 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன:- 

    வ.

    எண்

    விருதின் வகை விருது விவரம்
    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம்,
    ரூ.25,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ். (மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்.)
    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம்,
    ரூ.50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.
    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
    மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
    மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர். 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
    சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.

    மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை – 5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடமிருந்து பெறவேண்டும்.

    அதனைப் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் 26.06.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது  தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும், https://awards.tn.gov.in”என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். 

    மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழா நிகழ்வில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments