spot_img
More
    முகப்புகல்விமாணவ – மாண­வி­யர் – இளை­ஞர்­க­ளி­டம் மாபெ­ரும் வர­வேற்பை பெற்­றுள்ள ‘‘நான் முதல்­வன்’’ திட்­டத்­தின் ஓராண்டு...

    மாணவ – மாண­வி­யர் – இளை­ஞர்­க­ளி­டம் மாபெ­ரும் வர­வேற்பை பெற்­றுள்ள ‘‘நான் முதல்­வன்’’ திட்­டத்­தின் ஓராண்டு வெற்றி விழா!

    முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் நேற்று (7.8.2023) சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத் துறை சார்­பில் சென்னை, நேரு உள்­வி­ளை­யாட்டு அரங்­கில் நடை­பெற்றது. “நான் முதல்­வன்” திட்­டத்­தின் ஓராண்டு வெற்றி விழா­வில், இத்­திட்­டத்­தின் கீழ் பயிற்சி பெற்ற பொறி­யி­யல் கல்­லூரி மற்­றும் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி மாண­வர்­க­ளால் அமைக்­கப்­பட்­டுள்ள திறன் சாதனை கண்­காட்­சியை திறந்து வைத்தார்.

    “நான் முதல்­வன்” திட்­டத்தை பாலி­டெக்­னிக்­கு­கள் மற்­றும் தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­க­ளுக்கு விரி­வுப்­ப­டுத்தி, “நான் முதல்­வன்” நிர­லோட்ட இணைய தளம் (Hackathon), காலணி உற்­பத்தி தொழில்­நுட்­பம், ஆயத்த ஆடை உற்­பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரி­வு­க­ளில் ஒரு புதிய இளங்­கலை தொழிற்­கல்வி பட்­டப்­ப­டிப்பு, கலை­ஞர் 100 இணை­ய­த­ளம் ஆகி­ய­வற்றை தொடங்கி வைத்து, ஒன்­றிய அர­சின் குடி­மைப் பணி போட்­டித் தேர்­வு­க­ளில் தமி­ழக இளை­ஞர்­க­ளின் பங்­கேற்பை அதி­க­ரிக்­கும் வகை­யில் முதல்­நிலை தேர்­வில் தேர்ச்சி பெற்ற 10 மாண­வர்­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கை­யாக தலா 25 ஆயி­ரம் ரூபாய் வழங்­கி­னார்.

    முன்­னணி நிறு­வ­னங்­க­ளில் வேலை வாய்ப்பு!

    உயர் கல்­வி­யில் அடி­யெ­டுத்து வைக்­கும் பொறி­யி­யல், கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி மாண­வர்­கள் அனை­வ­ரும், இன்­றைய தொழில் துறைக்கு தேவை­யான நவீன திறன்­களை கற்­று­ணர்ந்து அவர்­க­ளது துறை­க­ளில் வெற்றி பெற ஏது­வாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைக்­கப்­பட்ட மாபெ­ரும் திறன் மேம்­பாட்­டிற்­கான திட்­டம் “நான் முதல்­வன்” திட்­டம் ஆகும்.

    இத்­திட்­டத்­தின் மூலம், கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு முன்­னணி நிறு­வ­னங்­கள் வாயி­லாக Data Engineering, (டேட்டா இன்­ஜி­னி­ரிங்) Genomic Mastery (ஜினோ­மிக் மாஸ்­டரி), PCR Technology (பிசி­ஆர் தொழில்­நுட்­பம்), Plant Tissue Culture, Algal Technology, Graphic Design, ரோபோட்­டிக்ஸ் (Robotics), செயற்கை நுண்­ண­றிவு (Artificial Intelligence), இயந்­திர கற்­றல் (Machine Learning), இன்­டர்­நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things), கிள­வுட் கணி­னி­முறை அடிப்­ப­டை­கள் (Cloud Computing), தொழில் 4.0. (Industry 4.0) சைபர் பாது­காப்பு (Cyber Security), பெருந்­த­ரவு ஆய்வு (Big Data Analytics), ஆக்­மென்ட்­டட் ரியா­லிட்டி (Augmented Reality), விர்­சு­வல் ரியா­லிட்டி (Virtual Reality), ஸ்மார்ட் எனர்ஜி கிரிட்(Smart Energy Grid), பிளாக்­செ­யின் டெவ­லப்­மன்ட் (Block Chain Development), நீடித்த கட்­டு­மான வடி­வ­மைப்பு (Sustainable Building Design), மின்­சார வாக­னத்­துறை (Electrical Vehicle) செயற்கை அறிவு தொழில் நுட்­பத்­தின் உன்­னத வடி­வ­மான Chat GPT, 5G தொழில்­நுட்­பம் போன்ற ¬¬¬¬¬ நவீன பாடப்­பி­ரி­வு­க­ளில் பயிற்­சி­கள் வழங்கி அவர்­க­ளுக்­குத் தகு­தி­யான வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்க வேண்­டும் என்ற தொலை­நோக்­கு­டன் தொடங்­கப்­பட்டு ஓராண்­டி­லேயே பொறி­யி­யல் மற்­றும் கலை அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளில் 13 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்கு திறன் பயிற்சி அளித்து “நான் முதல்­வன்” திட்­டம் சாதனை புரிந்­துள்­ளது.

    இளை­ஞர்­க­ளி­டம் வர­வேற்பு!

    மாணவ, மாண­வி­யர்­கள் மற்­றும் இளை­ஞர்­க­ளி­டம் மாபெ­ரும் வர­வேற்பை பெற்­றுள்ள “நாம் முதல்­வன்” திட்­டத்­தின் மூலம், 2022-–2023 ஆம் கல்­வி­யாண்­டில் பொறி­யி­யல் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளில் திறன் பயிற்சி முடித்­த­வர் க­ளின் மொத்த எண்­ணிக்கை 13,14,519 ஆகும். இவற்­றுள் இறு­தி­யாண்டு பொறி­யி­யல் பட்­டப்­ப­டிப்­பினை முடித்து வேலை­வாய்ப்­புக்கு விண்­ணப்­பித்­தி­ருந்த 85,053 மாண­வர்­க­ளில் 65,034 மாண­வர்­க­ளும். இறு­தி­யாண்டு கலை மற்­றும் அறி­வி­யல் பட்­டப்­ப­டிப்­பினை முடித்து வேலை­வாய்ப்­புக்கு விண்­ணப்­பித்­தி­ருந்த 99,230 மாண­வர்­க­ளில் 83,223 மாண­வர்­க­ளும் பணி­நி­ய­ம­னம் பெற்­றுள்­ள­னர்.

    இவற்­றுள் “நான் முதல்­வன்” திட்­டத்­திற்­கென்று பிரத்­தி­யே­க­மாக நடத்­தப்­பட்ட வேலை­வாய்ப்பு முகாம்­க­ளின் மூலம் கலை அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளில் 20,082 மற்­றும் பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் 5,844, என மொத்­தம் 25,926 பேர் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர்.

    “நான் முதல்­வன்” திட்­டத்­தின் ஓராண்டு வெற்றி விழா­வில், “நான் முதல்­வன்” திட்­டத்­தின் கீழ் பயிற்சி பெற்ற பொறி­யி­யல் கல்­லூரி மற்­றும் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி மாண­வர்­க­ளால் வடி­வ­மைக்­கப்­பட்ட தொழில்­தி­றனை வெளிப்­ப­டுத்­தும், தொழில் நுட்ப வடி­வ­மைப்­பு­களை காட்­சிப்­ப­டுத்­தும் திறன் சாதனை கண்­காட்­சியை மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்து, மாண­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

    தொடர்ந்து, அரசு கலை, அறி­வி­யல் மற்­றும் பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் தொடங்­கப்­பட்ட இத்­திட்­டம், தொழிற்­கல்வி மாண­வர்­க­ளின் எதிர்­கா­லத்­தை­யும் கவ­னத்­தில் கொண்டு, பாலி­டெக்­னிக்­கு­கள் மற்­றும் தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­க­ளுக் கும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் இன்று விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

    25 ஆயி­ரம் ரூபாய்

    அத­னைத் தொடர்ந்து, மாவட்ட நிர்­வா­கம் மற்­றும் அர­சுத்­துறை நிர்­வா­கத்­தில் மக்­கள் சேவை­யில் ஏற்­ப­டும் சவால்­க­ளுக்கு தீர்வு காணும் வகை­யி­லும், மாண­வர்­க­ளின் படைப்­பாற்­ற­லை­யும் புத்­தாக்க திற­னை­யும் ஊக்­கு­விக்­கும் வகை­யி­லும் “நான் முதல்­வன்” நிர­லோட்ட இணைய தளம் (Hackathon) தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் இன்று மாணவ சமு­தா­யத்­தின் பயன்­பாட்­டிற்­காக தொடங்கி வைக்­கப்­பட்­டது.

    பின்­னர், இளங்­கலை தொழில் கல்­வியை முன்­னெ­டுத்து தொழில் முனை­வோரை உரு­வாக்­கும் வகை­யில் அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கீழ் காலணி உற்­பத்தி தொழில்­நுட்­பம், ஆயத்த ஆடை உற்­பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரி­வு­க­ளில் இளங்­கலை தொழிற்­கல்வி (Bachelor of Vocation) என்ற ஒரு புதிய பட்­டப்­ப­டிப்பை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இன்று அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

    தொடர்ந்து, பல்­துறை வித்­த­கர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பல்­துறை சாத­னை­களை ஆவ­ணப்­ப­டுத்தி நினைவு கூறும் வித­மாக “கலை­ஞர் 100” இணை­ய­த­ளம் இந்­நி­கழ்ச்­சி­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

    பின்­னர், ஒன்­றிய அர­சின் குடி­மைப் பணி போட்­டித் தேர்­வு­க­ளில் தமி­ழக இளை­ஞர்­க­ளின் பங்­கேற்பை அதி­க­ரித்து வெற்றி பெறச் செய்­யும் நோக்­கி­லும், இப்­போட்­டித் தேர்­வு­க­ளில் பங்­கேற்க பொரு­ளா­தார ரீதி­யாக உள்ள தடை­களை நீக்­க­வும், குடி­மைப் பணி முதல்­நிலை தேர்­வில் தேர்ச்சி பெற்ற 10 மாண­வர்­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கை­யாக, தலா 25 ஆயி­ரம் ரூபாய்க்­கான காசோ­லையை முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார். இதில் விக்­னேஷ் குமார் என்ற மாற்­றுத்­தி­ற­னாளிஇளை­ஞர் குடி­மைப் பணி முதல்­நிலை தேர்­வில் தேர்ச்சி பெற்று ஊக்­கத்­தொகை பெற்­றுள்­ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

    புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள்

    இவ்­வி­ழா­வில், பெரு­நி­று­வ­னங்­க­ளின் சமூ­கப் பொறுப்­பின் கீழ், திறன் பயிற்சி அளிக்க “நான் முதல்­வன்” திட்­டத்­து­டன் இணைந்து செயல்­ப­டும் பயிற்சி பங்­கு­தா­ரர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் நினை­வுப் பரி­சு­கள் வழங்கி சிறப்­பித்­தார்.

    அத­னைத் தொடர்ந்து, முத­ல­மைச்­சர் அவர்­கள் முன்­னி­லை­யில், இளை­ஞர்­க­ளுக்கு சிறந்த திறன் பயிற்சி அளித்­தி­ட­வும், தொழிற்­சாலை திறன் பள்ளி பயிற்சி பெற்ற இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்­கி­டும் வகை­யி­லும், Tata Power Solar, Tata Electronics, Ernst & Young, TVS சப்ளை செயின் சொல்­யூ­ஷன்ஸ், வீல்ஸ் இந்­தியா, Pinnacle Infotech, KGISL, Technosmile, Teamlease, Infonet comm, Wadhwani Foundation, Tamilnadu Academy of Construction ஆகிய முன்­னணி நிறு­வ­னங்­க­ளு­டன் தமிழ்­நாடு அர­சால் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

    தொடர்ந்து, “நான் முதல்­வன்” திட்­டம் வாயி­லாக பயிற்சி முடித்த கல்­லூரி மாணவ, மாண­வி­யர்­க­ளுக்கு பல்­வேறு முன்­னணி நிறு­வ­னங்­க­ளால் அளிக்­கப்­பட்ட வேலை­வாய்ப்­பிற்­கான பணி­நி­ய­மன ஆணை­களை முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார்.

    தென்­னிந்­திய தொழிற்­கூட்­ட­மைப்­பின் தலை­வர் சங்­கர் வான­வ­ரா­யர்

    இவ்­வி­ழா­வில், உயர்­கல்­வித் துறை அமைச்­சர் முனை­வர் க.பொன்­முடி, இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின், இந்து சம­யம் மற்­றும் அற­நி­லை­யத் துறை அமைச்­சர் பி.கே. சேகர்­பாபு, தொழி­லா­ளர் நலன் மற்­றும் திறன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் சி.வி. கணே­சன், அமைச்­சர் பெரு­மக்­கள், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தலை­மைச் செய­லா­ளர் சிவ் தாஸ் மீனா, சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை செய­லா­ளர் தரேஷ் அக­மது, தமிழ்­நாடு திறன் மேம்­பாட்­டுக் கழக மேலாண்மை இயக்­கு­நர் இன்­ன­சென்ட் திவ்யா, “நான் முதல்­வன்” திட்ட முதன்மை செயல் அலு­வ­லர் டாக்­டர் எம்.ஜெய­பி­ர­கா­சன், தென்­னிந்­திய தொழிற்­கூட்­ட­மைப்­பின் தலை­வர் டாக்­டர். சங்­கர் வான­வ­ரா­யர் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments