spot_img
More
    முகப்புசெய்திகள்"மல்யுத்த வீரர்கள் போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை..!"

    “மல்யுத்த வீரர்கள் போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை..!”

    டெல்லியில் மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியவிதம் வேதனையும், கவலையும் அளிப்பதாக 1983-இல் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மல்யுத்த வீரர்கள் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திய புகைப்படங்கள் நாட்டையே உலுக்கின.

    இதைத் தொடர்ந்து, போராட்டத்தின் அங்கமாக தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தார்கள்.

    இந்நிலையில், 1983-ல் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்கள் கூட்டறிக்கை:

    “நமது மல்யுத்த சாம்பியன்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து கவலையும், வேதனையும் அடைந்துள்ளோம். மேலும், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவது குறித்து அவர்கள் சிந்தித்து வருவதும் எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது.

    பலவருட முயற்சி, தியாகம், மனஉறுதியின் மூலம் கிடைத்த பதக்கங்கள் அவை. பதக்கங்கள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நாட்டின் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.
    இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், அவர்களது குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம். நாட்டில் சட்டம் வெல்லட்டும்.”
    இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள முன்னாள் வீரர்கள் குறித்த விவரம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
    1983 உலகக் கோப்பை அணியில் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மொஹிந்தர் அமர்நாத், கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள்.
    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மல்யுத்த வீரர்கள் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திய புகைப்படங்கள் நாட்டையே உலுக்கின.
    இதைத் தொடர்ந்து, போராட்டத்தின் அங்கமாக தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தார்கள்.
    முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, இர்ஃபான் பதான், மனோஜ் திவாரி உள்ளிட்டோர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்கள்.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments