மத்திய உள்த்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் intelligence Bureau (IB) க்கு உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) Grade-II Executive பதவிக்கான 995 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www mha.gov.in இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை பார்க்கலாம்.
விண்ணப்பத்தாரர்கள் பட்டதாரியாக இருக்க வேண்டும்.15.12.2023 அன்று வயது 18 -ல் இருந்து 27 -க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி. உச்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 15 ஆம் தேதி முடிவடைகிறது பொதுப்பிரிவினர், பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியோர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.550, மற்ற அனைத்து விண்ணப்பதாரரக்ளுக்கும் ரூ.450 கட்டணம் செலுத்த வேண்டும்.
கொள்குறி வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். Current Affairs, General Studies, Numerical Aptitude, Reasoning / Logical Aptitude, English ஆகிய 5 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 கேள்விகள் கேட்க்கப்படும். மொத்தம் 100 மதிப்பென். ஒரு மணி நேரம் இத்தேர்வு நடக்கும். விடையை தவறாக குறித்தால் கால் மதிப்பெண் குறைக்கப்படும்.
முதல் கட்டத்தேர்வில் வெற்றி பெறுவோர், இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.அது விரித்துறைக்கும் வகையில் அதாவது Descriptive type – ல் இருக்கும். மொத்தம் 50 மதிப்பெண். கட்டுரை எழுதுதல் பிரிவுக்கு 30 மதிப்பெண், விரித்து எழுதுதல் பிரிவிற்கு 20 மதிப்பெண் என்று இரண்டாம் கட்டத் தேர்வு 50 மதிப்பெண் கொண்டதாகும். ஒரு மணி நேரம் இந்த தேர்வு நடக்கும்.
இந்த இரண்டாம் கட்ட எழுத்து தேர்வில் வெற்று பெறுவோர் நேர்காணல் எனப்படும் ஆளுமைத் தேர்வுக்கு அழைக்கபடுவர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மருத்துவ சோதனை முடிந்த பின்னர், வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். மத்திய அரசின் உள்த்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த வேலை, நாட்டின் பாதுகாப்பில் முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. கவுரவமும் மரியாதையும் மிக்க இந்த வேலைக்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது மத்திய அரசின் உள்த்துறை அமைச்சகம்.
நீங்கள் பட்டதாரியானால், உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 15 ஆம் தேதி ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளம் : www mha.gov.in

