எஸ்.எஸ்.சி என்று அழைக்கப்படும் மத்திய அரசின், அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசின் உள்த்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு ஆயுதப்படைகளுக்கு ’கான்ஸ்டபிள்’ வேலைக்கு 26,146 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண் – பெண் இருபாலாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 31 கடைசி நாள் ஆகும். தமிழ் வழியில் இந்த தேர்வை எழுதலாம்.
Border Security Force (BSF), Central Industrial Security Force (CISF), Central Reserve Police Force (CRPF), Indo Tibetan Border Police (ITBP), Sashastra Seema Bal (SSB), Secretariat Security Force (SSF), Rifleman (General Duty) in Assam Rifles, Sepoy in National Investigation Agency ஆகிய ஆயுதப்படை பிரிவுகளில் வேலைக்கு அமர்த்தபடுவர். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட்டோருக்கு இந்த வேலை அருமையான வாய்ப்பு.
விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பில் பாஸ் ஆகி இருக்க வேண்டும். மேல்படிப்பு உள்ளோரும் விண்ணப்பிக்கலாம். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று 18 வயதில் இருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, பிரிவு வாரியாக உச்சபட்ட வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
எழுத்து தேர்வானது, General Intelligence and Reasoning, General Knowledge and General Awareness, Elementary Mathematics, English ஆகிய பாடங்களில் நடக்கும். கொள்குறி வகையில் இத்தேர்வு நடைபெறும். என்.சி.சி – யில் ’சி’ சான்றிதழ் வைத்திருந்தால் எழுத்துத் தேர்வின் மொத்த மதிப்பெண்ணில் 5 சதவிகித மதிப்பெண்ணும், ’பி சான்றிதழுக்கு 3 சதவிகித மதிப்பெண்ணும் ’ஏ’ சான்றிதழுக்கு 2 சதவிகித மதிப்பெண்ணும் போனஸ் மார்க்குகளாக கிடைக்கும்.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோர், உடல் தகுதித்திறன் தேர்வுக்கு அழைக்கபடுவர். உயரத்தை பொறுத்த வரையில் ஆண்கள், குறைந்தபட்சம் 170 செண்டிமீட்டரும் பெண்கள் 157 செண்டிமீட்டர் இருக்க வேண்டும். இதில், இனம் வாரியாக, இடம் வாரியாக சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.சி அறிவித்துள்ள 26,146 காலிப்பணியிட நியமன அறிவிப்பு, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். உரிய கல்வித்தகுதியும் உடல் தகுதியும் உடைய 10 ஆம் வகுப்பு பாஸ் ஆன ஆண்களும் பெண்களும் உடனே இந்த வேலைக்கு https://ssc.nic.in என்ற இணையத்தளம் மூலம் நவம்பர் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் இந்த தேர்வு நடைபெறுவதால் தமிழ்நாட்டை சேர்ந்தோர் இந்த தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். உடனே விண்ணப்பியுங்கள்.

