மத்திய அரசுக்கு சொந்தமான The New India Assurance Company Limited என்கிற இன்ஸூரன்ஸ் நிறுவனத்தில் 300 ASSISTANTS பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதிவரை பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் The New India Assurance Company -க்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மருத்துவ காப்பீடு, வாகனங்கள் காப்பீடு, சுற்றுலா காப்பீடு என்று பொதுக் காப்பீட்டுத்துறையில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு 300 பட்டதாரி உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். நாடு முழுவதும் மாநிலம் வாரியாக தேர்வு செய்யப்பட இருக்கும் காலிப் பணி இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கு 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொள்குறி வகையிலான எழுத்து தேர்வு Preliminary Examination, Main Examination என்று இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. நிறைவாக, அந்தந்த மாநில மொழி தேர்வு நடைபெறும். அதாவது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்மொழி தகுதி தேர்வு உண்டு. ஆக, மூன்று கட்டமாக தேர்வு நடந்தாலும் Main Examination மார்க் அடிப்படையில்தான் பணி நியமனம் நடைபெறும்.

Preliminary தேர்வில் Test of English Language, Test of Reasoning, Test of Numerical Ability ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். Main தேர்வில் Test of English Language, Test of Reasoning , Test of Numerical Ability, Computer Knowledge, Test of General Awareness ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். இந்த தேர்வுகளில் ஆங்கில பாடத்தைத் தவிர மற்ற பாடங்களின் வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும்.

ஏதாது ஒரு இளநிலை பட்டம் முடித்த பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர் வயது ஜனவரி 1 ஆம் தேதி அன்று 21 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, இனங்கள் அடிப்படையில் உச்சபட்ச வயது வரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரை www.newindia.co.in என்ற இணையம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா..? தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கலாம்.

