Union Bank of India வங்கியில் Specialist Officer பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பத்தை பிப்ரவரி 3 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியான Union Bank of India வங்கியில் Specialist Officer பணிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள 606 காலியிடங்களில்,Chief Manager பிரிவில் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Senior Manager பிரிவில் 42 பணியிடங்களும், Manager பிரிவில் 451 பணியிடங்களும் Assistant Manager பிரிவில் 108 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

B.E., B.Tech., M.Tech.,B.Sc., M.Sc., MBA, CA, CMA, CS, LLB தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு சில பணிகளுக்கு, பணி சார்ந்த முன் அனுபவம் தேவை என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகள், கல்வித்தகுதி, பணி முன் அணுபவம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள unionbankofindia இணையத்தில் Recruitment பக்கத்தை கிளிக் செய்து பார்க்கலாம்.
ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணிக்கான தேர்வு கொள்குறி வகையில் நடக்கிறது. இத்தேர்வுக்கு பிறகு, Group Discussion, Personal Interview என்று அடுத்தடுத்து ஆளுமைத் தேர்வுகள் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளோர் பிப்ரவரி 3 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை www.unionbankofindia.co.in என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


