சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பச்சையப்பா அறக்கட்டளையின் நிர்வாகத்தில் Pachaiyappa’s College – Chennai, Kandaswami Naidu College for Men – Chennai, Chellammal Women’s College – Chennai, Pachaiyappa’s College for Men – Kanchipuram, Pachaiyappa’s College for Women – Kanchipuram, C.Kandaswami Naidu College for Women – Cuddalore ஆகிய இடங்களில் மொத்தம் 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் நிதி உதவி பெற்று நடக்கும் இந்த கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படிக்கிறார்கள். பல நூறு ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்தக் கல்லுரிகள் அனைத்தும் தமிழக அரசின் நிதி உதவி பெறும் கல்லூரி என்பதால் இந்த கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைக்கும்.

இந்த, பச்சையப்பா அறக்கட்டளை நடத்தும் 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 132 உதவிப் பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Commerce, Corporate Secretaryship, Economics, Philosophy, Hisoty, Librarian, Director Of Physical Education ஆகிய பாடங்களுக்கு உதவி பேராசியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
Ph.D., முடித்தவர்கள், NET, SLET, SET தேர்வில் பாஸ் ஆனவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது UGC விதிகளின் படி கல்வித் தகுதிகள், பணி அணுபவம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாளுக்கு முன்னர், அதாவது பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு முன்பாக, Professional and Executive Employment Office Chennai-யில் தங்கள் படிப்புகளை கண்டிப்பாக பதிவு செய்து இருக்க வேண்டும்.

www.pachaiyappastrustboard.org என்ற இணையம் வழியாக மட்டுமே பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 16 அம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையம் வழியாக விண்ணப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் “The Secretary, Pachaiyappa’s Trust Board, Pachaiyappa’s College Campus, Chennai – 600 030” என்ற முகவரியில் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் உடையோர், உடனே விண்ணப்பிக்கலாம்.

