Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
’’மணிப்பூர் இன வன்முறைக்கு விரைந்து தீர்வு காண்க..!’’ பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’மணிப்பூர் இன வன்முறைக்கு விரைந்து தீர்வு காண்க..!’’ பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்

    ’’மணிப்பூர் இன வன்முறைக்கு விரைந்து தீர்வு காண்க..!’’ பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்

    ''மணிப்பூர் வன்முறைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 50 நாட்களாக வன்முறையால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முறையிட எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. அதற்காக, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பிரதமர் அலுவலகத்தை அணுகி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. எனினும், மணிப்பூர் எதிர்க்கட்ச களைச் சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. அத்துடன், செவ்வாயன்று அமெரிக்கா, எகிப்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் கிளம்பிச் சென்றுவிட்டார். இதனால் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட முடியாத மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 10 எதிர்க்கட்சிகள், தற்போது கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

    மணிப்பூரில் 2023 மே 3-ஆம் தேதி இன வன்முறை வெடித்தது. அப்போது துவங்கி 150-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன, 1,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. 60,000-க்கும் அதிக மான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் மற்றும் கோவில்களும் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூருக்கு வந்திருந்தார். அப்போது, சில அரசியல் கட்சிகளுடன் உரையாடினார். இரு (மெய்டெய் – குக்கி)சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களையும் சந்தித்தார். ஜூன் 1, 2023 அன்று அவர் உறுதியளித்த போதிலும், அமைதி திரும்புவது கடினமாகவே உள்ளது. மேலும் வன்முறை தொடர்வதால் அதிகமான இறப்புகள், காயங்கள் மற்றும் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை. மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பது மிக அவசரத் தேவையாகும். குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் உட்பட பத்து எம்.எல்.ஏ.க்கள் குக்கி -களுக்கு “தனி நிர்வாகம்” கோரி ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டனர்.

    ஒன்றிய உள்துறை அமைச்சர் தனது பயணத்தின் போது மணிப்பூரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார். ஆனால், பாஜகவின் பிரித்தாளும் அரசியலே மணிப்பூரின் தற்போதைய நெருக்கடிக்கு காரணம். மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு ஒன்றிய ஆட்சியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக அரசுகள் இரண்டுமே பொறுப்பேற்க வேண்டும். மணிப்பூரில் 355-ஆவது சட்டப்பிரிவை அமல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசும், மாநில அரசும் தெளிவற்ற நிலையில் உள்ளன. மணிப்பூரில் பல உயிர்களை பலிவாங்கிய மற்றும் ஆயி ரக்கணக்கான குடிமக்களுக்கு அழிவை ஏற்படுத்திய இன வன்முறை குறித்து பிரதமரின் மவுனமானது மணிப்பூர் மக்கள் மீதான அலட்சி யத்தின் வெளிப்பாடு அன்றி வேறில்லை என் பதை தெளிவாக உணர்த்துகிறது.

    பாஜக முதல்வரே பொறுப்பு

    மணிப்பூர் இன வன்முறையின் சிற்பியே, மணிப்பூர் முதல்வர் என்.பைரேன் சிங் அவர் கள்தான். அவர் முன்னெச்சரிக்கை மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இன மோதல்களைத் தவிர்த்திருக்கலாம். மாநில அரசாங்கத்தின் தரப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் உளவுத்துறை தோல்விகள் இருந்தன என்பதை பைரேன் சிங்கே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு அவரே முழுப் பொறுப்பேற்க வேண்டும். மேற்கூறிய சூழ்நிலைகளின் பின்னணியில், மணிப்பூரில் உள்ள பத்து அரசியல் கட்சி களின் பிரதிநிதிகளாகிய நாங்கள், பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாகத் தலையிட்டு இன நெருக்கடிக்குத் தீர்வுகாணுமாறு கேட்டுக்கொள்கிறோம்:

    1. ‘தனி நிர்வாகம்’ என்ற கோரிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம், மணிப்பூரின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக நாங்கள் நிற்கிறோம்.

    2. மணிப்பூர் ஒரு அசாதாரணமான பன் முகத்தன்மை கொண்ட சமூகம். அனைத்து சமூகங்களுக்கிடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் காலத்தின் தேவையாகும். எனவே, ஒவ்வொரு சமூகத்தினரின் குறை களும் கேட்கப்பட்டு உணர்வுப்பூர்வமாக தீர்க்கப்பட வேண்டும். அனைத்து ஆயுதக் குழுக்களும் உடனடியாக நிராயுதபாணி யாக்கப்பட வேண்டும்.

    3. அதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டை உட னடியாக நிறுத்த, பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். குக்கி போராளிகள், ‘செயல்பாட்டு இடைநிறுத்தம்’ விதிகளைக் கடைப்பிடிப்பது கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும்.

    4. மணிப்பூரின் உயிர்நாடியான திமாபூர் – இம்பாலை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண். 2, மே 3 முதல் நெடுஞ்சாலையோரம் வசிக்கும் சில குக்கி அமைப்புகளால் தடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் இயக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது, இதன் விளைவாக அவை கிடைக்காமல் விலைவாசி உயர்கிறது. அரசு இந்த நெடுஞ்சாலையைத் திறக்க வேண்டும்.

    5. மணிப்பூர் மாநிலத்திற்கு இந்திய அரசு நிவா ரண நிதியாக அறிவித்த ரூ.101.75 கோடி போதுமானதாக இல்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உடைமை களின் அளவைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். மறுவாழ்வு, மீள்குடி யேற்றம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஒரு யதார்த்தமான நிவாரணத்தை, மாநில அரசாங்கத்திடம் தரவுகளைப் பெற்று அதனடிப்படையில் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    வாஜ்பாயை கூடவா, பிரதமர் மோடி

    முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது? எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற் குப் பின் மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மணிப்பூர் கடந்த 40 நாட்களாக பற்றி எரிகிறது. பலர் உயிரிழந்து விட்டனர். ஆனால், இன்று வரை இதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவே இல்லை. இதன்மூலம் மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதிதானா?, என்ற சந்தேகம் எழுகிறது” என்று கூறியதுடன், “இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

    கடந்த 2001-ஆம் ஆண்டு மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டபோது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித் துப் பேசியதையும் மணிப்பூரைச் சேர்ந்த 3 மூத்த தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். ‘‘தங்கள் சொந்த (பாஜக) கட்சித் தலைவரிடம் (வாஜ்பாய்) இருந்து பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேச வேண்டும். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments