நான் நம்பும் விஷயத்திற்காக உயிரைவிடவும் தயார்! தியாகம்செய்யவும் தயார்! என்றும் மணிப்பூரில் இந்தியத் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றும் நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தில் ராகுல் காந்தி பேசுகையில் குறிப்பிட்டார்.
மோடி அரசு மீது “இந்தியா”கூட்டணிக் கட்சிகள் சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் மீது மக்கள வையில் நேற்று 2-வது நாளாக விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசியதாவது:
சபாநாயகர் அவர்களே, முதலில் மீண்டும் என்னை மக்களவையில் இணைத்துக் கொண்டதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை நடைபயணத்தின் போது அனைத்துத் தரப்பு மக்க ளின் குரல்களையும் கேட்டேன். நான் இன்று பேச தொடங்கிய வுடன் வெறுப்புடன் சிலர் பேசத் தொடங்கி னார்கள்; இந்த வெறுப்புணர்வை நீக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒற்றுமையாத்திரையின் மூலமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்; உண்மையான இந்தியாவைஅந்தப் பயணத்தின் வழியாக நான் பார்த்தேன். நான் மணிப் பூருக்கு நேரில் சென்றேன்.
கடந்த முறை நான் பேசியபோதுஅதானியை குறித்து பேசியது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கலாம்.
அச்சப்பட வேண்டாம்!
உங்கள் மூத்த தலைவர்கள் வேதனைஅடைந்திருக்கலாம். அந்த வேதனைஉங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக நான் உங்களிடம்மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.ஆனால், நான் உண்மையைப் பேசி னேன். இன்று நான் அதானிபற்றி பேசப் போவதில்லை. மணிப்பூர் பற்றியே பேசப் போகிறேன் என்பதால் எனது பா.ஜ.க. நண்பர் கள் அச்சப்பட வேண்டியதில்லை.
இதயத்தில் இருந்து பேசும் பேச்சு இதயங்களை சென்றடை யும் என்பதால், இதயத்தில் இருந்து பேசப் போகிறேன். 130 நாட்களுக்கு நாட்டின் ஒரு முனை யில் நடைபயணம் இருந்து மற்றொரு முனைக்கு மக்களுடன்இணைந்து பயணம் நடத்தினேன். என்னுடைய பயணம் இன்னும்முடிவடையவில்லை. பயணத்தின்போதும், அதன் பிறகும் நிறைய பேர் என்னிடம் ஏன் பயணம் செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். குமரியில் இந்தப் பயணத்தை துவங்கிய போது, நாட்டை புரிந்து கொள்வதற்காகவே இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ஆரம்பித்தேன்.
ஒற்றுமைப் பயணத்தில் நிறைய விஷயங் களை கற்றுக் கொண்டேன். நான் நம்பும் விஷயத்துக்காகஉயிரை விடவும்,பிரதமர் விரும்பி னால் சிறை செல் லவும் தயாராக உள்ளேன். 10 ஆண்டுகளாகபா.ஜ.க.வினரால்நான் அலைக்கழிக்கப்பட்டு உள்ளேன்.
விவசாயிகளின் வலி..!
எனது பயணம் துவங்கிய போது பயம் இருந்தது. பயணத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன். இந்தப் பயணத்தில்உண்மையான இந்திய மக்களை பார்த்தேன். மக்கள், எனக்கு ஏராளமான உதவிகளை செய்தனர். அவர்களின் ஆதரவும் கிடைத்தது. ஏழைகளின் வேதனைகளையும் உணர்ந்தேன். அனைத்துத் தரப்பு மக்களும் எனது பயணத்தில் இணைந்தனர்.
விவசாயிகளின் பிரச்சினை களை கேட்டறிந்தேன். விவசாயிகளின் இதயத்தில் இருந்த வலி என் இதயத்துக்கு இடம் மாறியது. இந்தப் பயணம் எனது வாழ்க்கையை மாற்றியது. நாட்டு மக்களின் குரலை கேட்கும் போது மனதில் உள்ள வெறுப்பு கள், ஆசைகள் விலகிச் செல்லும். இந்தியாவில் விவசாயிகளின் நிலை மோசமாக இருந்ததைக் கண்டேன்.
மணிப்பூருக்கு நான் சென்று வந்தேன். இந்நாள் வரை பிரதமர் மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்லவில்லை. மணிப்பூர் இந்தியாவில் இல்லையா? நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் தான் பிரதமர் அங்கு செல்லவில்லை. அம்மாநில மக்களை பிரதமர் கைவிட்டு விட்டார். மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேசினேன். தன் கண் முன்னே தன் ஒரே மகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது என்று பெண் ஒருவர் என்னிடம் சொன்னார். மகனை இழந்த பெண் உடைமைகளை விட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
மற்றொரு முகாமில் உங்களுக்கு என்ன நடந்தது என்று ஒரு பெண்ணைப் பார்த்து நான் கேட்டதும் அவர் மயக்கம் அடைந்தார். நினைத்துப் பார்க்கவே பயங்கரமான சம்ப வங்கள் நடந்துள்ளதாக நிவாரண முகாமில் உள்ள பெண்கள் தெரிவித்தனர்.
இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றிருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது. மணிப்பூரில் நடக்கும் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டின் மீதான கொலை.
மணிப்பூர் – அரியானா எரிகிறது!
பா.ஜ.க.வின் அரசியலில், மணிப்பூரில் நமது நாடு கொலை செய்யப்பட்டுவிட்டது. மணிப்பூரில் இந்தியாவை கொலை செய்தீர்கள்.
மணிப்பூரில் மக்களை கொன்றதால் இந்திய தாய் கொலை செய்யப்பட்டார். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள். மணிப்பூர் குரலை நசுக்கிவிட்டீர்கள்.
என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை மணிப்பூரில் கொன்றிருக்கி றீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேசத் துரோகிகள். மணிப்பூர் கலவரத்தை இந்திய ராணுவத்தால் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதனை நீங்கள் செய்யவில்லை.
மோடி தலைமையிலான அரசின் அலட்சியத்தால் மணிப்பூர், அரியானா போன்ற மாநிலங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு ராகுல்காந்தி உரையாற்றினார்.
பா.ஜ.க. கடும் இடையூறு!
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி உரையாற்றிய போது, பா.ஜ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு செய்யும் வகையில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மக்களவைத் தலைவரின் வேண்டுகோளை மதிக்காமல் பா.ஜ.க.வினர் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர்.

