spot_img
More
    முகப்புஅதிகம் வாசிக்கப்பட்டவை’’இரட்டை இன்­ஜின் அரசு - இரட்டை பேர­ழிவு அரசு..!’’ மோடி அரசை விளாசிய கனிமொழி எம்பி.,

    ’’இரட்டை இன்­ஜின் அரசு – இரட்டை பேர­ழிவு அரசு..!’’ மோடி அரசை விளாசிய கனிமொழி எம்பி.,

    ‘‘சாமா­னி­யர்­க­ளின் கோபத்­தால் சரிந்த பாண்­டி­யன் செங்­கோ­லைப் பற்றி அறி­வீர்­களா? தேசத்­தின் அனைத்து மக்­க­ளை­யும் ஒன்­றாக மதிக்­கத் தெரி­யாத நீங்­கள் தேசிய­வா­தி­களா?’’ என்று நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் திமுக குழுத் தலை­வர் கனிமொழி கரு­ணா­நிதி மத்திய அரசை கடு­மை­யாக சாடி­ பேசினார்.

    பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்திய அர­சுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்பிக்கை இல்லா தீர்­மா­னத்­தின் மீது நாடா­ளு­மன்ற தி.மு.க. குழு துணைத் தலை­வர் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது :

    “இந்த சுதந்­தி­ரம் நம் மீது பெரும் பொறுப்­பு­களை சுமத்­தி­விட்­டுச் சென்­றுள்­ளது. ஏதே­னும் தவறு நேர்ந்­தால் இதற்கு பிரிட்­டீஷ் ஆட்­சி­யா­ளர்­கள் கார­ண­மா­க­மாட்­டார்­கள் என்ற டாக்­டர் பாபா­சா­கிப் அம்­பேத்­க­ரின் கருத்­து­டன் இந்த உரையை தொடங்­கு­கி­றேன். இந்த நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்தை தி.மு.க. சார்­பா­க­வும், நான் சார்ந்த இந்­தியா கூட்­டணி சார்­பா­க­வும் ஆத­ரிக்­கி­றேன்.

    ஒரு மாநி­லத்­தைக் காப்­பாற்ற நீதித்­துறை தலை­யிட வேண்­டி­யி­ருக்­கி­றது. இது ஒன்­றிய அர­சுக்கு வெட்­கக் கேடான செயல் இல்­லையா? ஒன்­றி­யத்­தி­லும் பாஜக அரசு மாநி­லத்­தி­லும் பாஜக அரசு என்­பதை டபுள் இன்­ஜின் அரசு என்று சொல்­லிக் கொள்­ளும் பாஜக இதை மணிப்­பூ­ரி­லும் சொல்லி பெரு­மைப்­ப­டுக் கொண்­டது. ஆனால், இந்த டபுள் இன்­ஜின் அரசு டபுள் எட்­ஜுடு அதா­வது இரு முனை­யி­லும் கூரான ஆயு­த­மாக மணிப்­பூரை தாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. அது­மட்­டு­மல்ல இரட்­டைப் பேர­ழிவு, இரட்டை முடக்­கம் என்ற நிலை­யில் மணிப்­பூ­ரைக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

    வெளி­நாட்டு சுற்­றுப் பய­ணத்தை முடித்­து­விட்டு திரும்­பிய பிர­த­மர் மோடி அரி­தான நிகழ்­வாக நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தார். ஆனால் நாடா­ளு­மன்­றத்­துக்கு உள்ளே வந்து மதிப்­புக்­கு­ரிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­னி­லை­யில் பேச மறுக்­கி­றார்.

    மூத்த தலை­வர் யஷ்­வந்த் சின்ஹா அவர்­கள் நேற்று முன் தினம் எழு­திய கட்­டு­ரை­யில் ஜன­நா­ய­கம் என்­பது நாடா­ளு­மன்­றக் கட்­டி­டத்­தின் அழ­கால் வரை­ய­றுக்­கப்­ப­டு­வ­தில்லை… தேசத்­தின் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களை நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திப்­ப­தில்­தான் ஜன­நா­ய­கத்­தின் தரம் இருக்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

    ’இந்­தியா’ கூட்­டணி இதற்­கா­கத்­தான் மணிப்­பூர் பற்றி நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடத்த வேண்­டும் என்று அழைப்பு விடுத்­தது. பாஜக அதை எதிர்க்­கி­றது.

    மணிப்­பூ­ரில் 170 பேர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் காய­ம­டைந்­தி­ருக்­கி­றார்­கள். அறு­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் தங்­கள் இருப்­பி­டங்­க­ளில் இருந்து இடம் பெயர்ந்­தி­ ருக்­கி­றார்­கள். 3500 வீடு­கள் எரிக்­கப்­பட்­டு­விட்­டன. இரு தரப்­பி­லும் மக்­கள் கொடூ­ர­மாக கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள், பெண்­கள் பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

    மூன்று மாதங்­க­ளாக நடக்­கும் இந்த கல­வ­ரத்தை ஏன் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்று மணிப்­பூர் மாநில முதல்­வ­ரி­டம் கேட்­டால், ‘இரண்டு சகோ­த­ரர்­கள் சண்­டை­யிட்­டுக் கொள்­கி­றார்­கள். அரசு தந்­தையை போல செயல்­பட்டு இரு­த­ரப்­புக்­கும் இடையே பேசிக் கொண்­டி­ருக்­கி­றது’ என்­கி­றார். இப்­படி சொல்­வ­தற்கு உங்­க­ளுக்கு வெட்­க­மாக இல்­லையா?

    மணிப்­பூர் மாநி­லம் பொது­மக்­கள்-­போ­லீஸ் விகி­தத்­தில் இந்­தி­யா­வி­லேயே உயர்ந்த நிலை­யில் இருக்­கி­றது. 161 மத்­திய கம்­பெனி போலீ­சார், அசாம் ரைபிள் படை­யி­னர் உட்­பட மணிப்­பூ­ரில் இருக்­கி­றார்­கள். ஆனா­லும் அரசு மக்­க­ளைக் காப்­பாற்­றத் தவ­ற­விட்­டது. பிர­த­ம­ரின் மவு­ன­மும், மணிப்­பூர் அர­சின் செய­லற்ற தன்­மை­யும் மணிப்­பூ­ரில் வீடு­கள் எரிக்­கப்­ப­ட­வும், போலீ­ஸாரே சூறை­யா­ட­லில் ஈடு­ப­டு­வ­தை­யும், மக்­களே ஒரு­வரை ஒரு­வர் அடித்­துக் கொண்டு சாவ­தை­யும் தொட­ரச்செய்­தி­ருக்­கி­றது. பெண்­களை ஆணவஅணி­வ­குப்பு நடத்தி பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளாக்­கி­யி­ருக்­கி­றது.

    இந்த டபுள் இன்­ஜின் அரசு கைக­ளைக் கட்­டிக் கொண்டு சகோ­த­ரர்­கள் சண்­டை­யி­டுவதைப் பார்த்­துக் கொண்டே இருந்­தி­ருக்­கி­றது.

    மணிப்­பூ­ரில் இரு பெண்­கள் பாலி­யல் வன்­மு­றைக்கு ஆளாக்­கப்­பட்டு நிர்­வா­ண­மாக இழுத்­துச் செல்­லப்­பட்ட அந்த வீடி­யோ­தான் தேசத்­தின் மன­சாட்­சி­யை­யும் உல­கத்­தின் மன­சாட்­சி­யை­யும் ஒரு சேர உலுக்­கி­யது. 21 வயது இளம்­பெண்­ணின் தந்­தை­யும், சகோ­த­ர­ரும் அவ­ளைக் காப்­பாற்ற போரா­டி­ய­போது கொல்­லப்­பட்­ட­னர். வன்­முறை கும்­பல் அந்த குடும்­பத்தை பிடித்­த­போது அந்த குடும்­பத்­தி­னர் அங்­கி­ருந்த போலீஸ் ஜிப்­சியை நோக்கி ஓடி­யி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் போலீஸ்­கா­ரர்­க­ளி­டம், ‘எங்­களை போலீஸ் ஜிப்­சி­யில் ஏற்றி எங்­கா­வது பாது­காப்­பான இடத்­தில் கொண்டு போய் விட்­டு­வி­டுங்­கள்’ என்று பிச்­சை­யெ­டுப்­ப­தைப் போல போலீ­சா­ரி­டம் கெஞ்­சி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால் போலீஸ் அந்த குடும்­பத்­தி­ன­ருக்கு உதவ மறுத்­து­விட்­டது. மாறாக அந்த பெண்ணை வன்­முறை கும்­ப­லி­டமே ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது போலீஸ். அதன் பிற­கு­தான் அந்த பெண்­ணின் தந்­தை­யும் கொல்­லப்­பட்­டார், சகோ­த­ரும் கொல்­லப்­பட்­டார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments