spot_img
More
    முகப்புUncategorized''பிளஸ் டூ ரிசல்ட்..! மே 8-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்

    ”பிளஸ் டூ ரிசல்ட்..! மே 8-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்

    பிளஸ் டூ ரிசல்ட்டை மே 8-ம் தேதி சென்னை கோர்ட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.

    மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( பிளஸ் டூ ரிசல்ட்) பொதுத் தேர்வுகள் 13.03.2023 முதல் 03.04.2023 வரை நடந்தது. 7,600 பள்ளிகளில் இருந்து 8.80 லட்சம் மாணவ – மாணவிகள் இத்தேர்வை எழுதினர். இந்த வினாத்தாள்கள் திருந்தப்பட்டு, ரிசல்ட் வெளியிட தயார் நிலையில் இருப்பதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ மேல்நிலை இரண்டாம் ஆண்டு 2023 பொதுத் தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் 08.05.2023 அன்று, கோர்ட்டுர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கில்  காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.

    www.tnresults.nic.in www.dge1.tn.nic.in  www.dge2.tn.nic.in   www.dge.tn.nic.in ஆகிய தளங்களில் இந்த ரிசல்ட் வெளியிடப்படும். தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்கள் ஆகியவற்றிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது. 

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments