மிலிட்டரி நர்சிங் சர்வீஸில் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் பிரிவில் உள்ள வேலைக்கு எம்.எஸ்.சி நர்சிங், Post Basic பி.எஸ்.சி நர்சிங், பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண்களிடம் இருந்து டிசம்பர் 11 ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மிலிட்டரி நர்சிங் சேவை என்பது இந்திய இராணுவ மருத்துவ சேவைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மிலிட்டரி நர்சிங் சர்வீஸ்க்கு தேர்வு செய்யப்படுவோர் நாட்டின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் மருத்துவ நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும்.
டிசம்பர் 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி உள்ள பெண் விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வானது ஜனவரி 14 ஆம் தேதி நாடு முழுவதும் கணினி வழியில் நடைபெறும். இந்த தேர்வானது காலை 10 மணியில் இருந்து 12.30 மணி வரை நடைபெறும்.
இத்தேர்வில், நர்சிங், ஆங்கில மொழி மற்றும் ஜெனரல் நுண்ணறிவு ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். கொள்குறி வகையில் கேள்விகள் இருக்கும். தவறான விடையை தேர்ந்தெடுத்தாலும் நெகட்டிவ் மார்க் கிடையாது. இந்தத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 50 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் மருத்துவ நிறுவனங்களில் காலியாக உள்ள இடத்திற்கு ஏற்ப எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெறும். நேர்காணலுக்கான வழிமுறைகளுடன், இந்திய ராணுவத்தின் ww.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தோராயமாக இந்த ஆண்டு 200 காலி இடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் மருத்துவத்துறைகளில் நர்ஸ் பணியில் சேர அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நர்ஸ்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

