அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற் கல்வி ஆசிரியர் ஆகிய பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உரியக் கல்வித் தகுதியும் ஆர்வமும் உடைய விண்ணப்பத்தாரர்கள் நவம்பர் 29 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். போட்டி எழுத்துத் தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெறுகிறது. இது நிரந்தர பணிக்கான அறிவிப்பாகும்.
உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புகல்லூரிகள், மண்டல வளாகக் கல்லூரிகள், ’’திருநெல்வேலி, மதுரை, கோயமுத்தூர், அரியலூர், ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோவில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, தூத்துக்குடி, திண்டிவனம், திருச்சி, விழுப்புரம்’’ ஆகிய இடங்களில் உள்ளது.
இந்த என்ஜினியரிங் கல்லூரிகளில் Automobile Engineering, Civil Engineering, Computer Science and Engineering, Information Technology, Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Mechanical Engineering, Mathematics, Management Sciences ஆகிய துறைகளில் காலியாக உள்ள 205 உதவிப் பேராசிரியர்கள், 14 உதவி நூலகர், 13 உடற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Engineering / Technology துறைக்கு B. E. / B. Tech. / B. S. and M. E. / M. Tech. / M. S. or Integrated M. Tech படித்தோரும் Science & Humanities துறைக்கு பல்கலைக் கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். Management Sciences துறைக்கு முதல் வகுப்பில் Business Administration / PGDM / C.A. / ICWA/ M.Com படித்தோர் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு ஆள் தேர்வு அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதியும் ஆர்வமும் உள்ளோர் நவம்பர் 29 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, விண்ணப்பத்தில் உரிய இடங்களில் கையெழுத்திட்டு உரிய ஆவணங்களுடன் Registrar, Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கு Speed Post அல்லது Registered Post with acknowledgement _டோடு 18.12.2023 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வுக்கு 60 மார்க், பாடம் சார்ந்த தொழில்நுட்ப அறிவு குறித்து எக்ஸ்பெர்ட் கமிட்டி முன்பு சொல்லும் விளக்கத்துக்கு 20 மதிப்பெண், நேர்முகத்தேர்வில் 20 மார்க் என்று போட்டித்தேர்வுக்கு 100 மார்க் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு ஒரு மார்க் வீதம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து மார்க் மட்டுமே வழங்கப்படும்.
உரிய கல்வித்தகுதியும் ஆர்வமும் உடைய விண்ணப்பத்தாரர்கள் அண்ணாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு குறித்த முழுவிபரத்தை அறியவும் விண்ணப்பிக்கவும் https://www.annauniv.edu/ உடனே பார்த்து விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் வேலை செய்ய அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. உடனே விண்ணப்பியுங்கள். டிசம்பர் 13 ஆம் தேதி கடைசி நாள். —– அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், நூலகர் வேலை உடனே விண்ணப்பிக்கலாம்

