spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு''பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1025 SPECIALIST OFFICERS வேலை..!'' உடனே விண்ணப்பிக்கலாம்

    ”பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1025 SPECIALIST OFFICERS வேலை..!” உடனே விண்ணப்பிக்கலாம்

    பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் இருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்பெஷலைஸ்டு ஆபீஷர்ஸ் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் பணிபுரிய 1025 அதிகாரிகளை தேர்வு செய்யும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    ஜனவரி 1 ஆம் தேதிப் படி, கிரெடிட் அதிகாரி பணிக்கு, விண்ணப்பத்தாரர் வயது 21 முதல் 28 -க்குள் இருக்க வேண்டும். MBA அல்லது PG டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் அல்லது பட்டய கணக்காளர் CA / CMA / CFA தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மொத்த காலிப் பணியிடம் 1000.

    அந்நிய செலாவணி மேலாளர் பதவி விண்ணப்பத்தாரர் வயது 25 முதல் 35 -க்குள் இருக்க வேண்டும். MBA அல்லது PG டிப்ளோமா மேலாண்மை படிப்பு முடித்து 2 வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும். மொத்த காலிப் பணியிடம் 15.

    Cyber ​​Security Manager பதவி விண்ணப்பத்தாரர் வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். BE / B.Tech in Computer Science / IT / Electronics & Communication / MCA முடித்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். மொத்த காலிப்பணியிடம் 5.

    Cyber Security Senior Manager விண்ணப்பத்தாரர் வயது 27 முதல் 38 -க்குள் இருக்க வேண்டும். BE / B.Tech கம்ப்யூட்டர் சயின்ஸ் / ஐடி / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எம்.சி.ஏ ஆகியவற்றில் 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மொத்த காலிப்பணியிடம் 5.

    இந்த பணிக்கான எழுத்து தேர்வு, ஆன் லைன் வழியில் கொள்குறி வகையில் இருக்கும். Reasoning, English Language இந்த இரண்டு பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் கேட்க்கப்படும். Quantitative Aptitude, Professional Knowledge பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்க்கப்படும். சரியான விடை ஒவ்வொன்றுக்கும் ஒரு மார்க் கிடைக்கும். தவறான விடையை டிக் செய்திருந்தால் நான்கில் ஒரு பகுதி மார்க் குறைக்கப்படும்.

    எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் மார்க் அதிகபட்சமாக 50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, நேர்காணல் மார்க் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர்,.1025 அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்படும்.

    தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய ஊர்களில் தேர்வு மையங்கள் உண்டு. தகுதியும் ஆர்வமும் உடையோர் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் www.pnbindia.in விண்ணப்பிக்கலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments